பக்கம்:இன்றும் இனியும்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து 9 157 அன்பு பூண்டுவிட்டாரா அப் புலவர்? இவ்வாறு தந்தை முதலாகச் செய்த செயலை மறைத்து மகனே செய்ததுபோலப் பாடுபவரையா காசறு செய்யுள் புலவர் எனப் பாராட்டுவது? பரணரை ஒத்த புலவர் இத்தகைய பெரும் பிழையைச் செய்திருப்பாரா? எனவே, இதனாலும் ஐந்தாம் பத்தைப் பரணர் பாடவில்லை என்ற கருத்தே வலியுறல் காண்க. இப்பத்தைப் பரணர் பாடவில்லை என்பது ஒருபுறம் இருக்க, நெடுஞ்சேரலாதனும் குட்டுவனும் தந்தையும் மகனும் அல்லர் என்பதும் இதனால் வெளிப் படுகிறதன்றோ! தம்முள் தொடர்பற்றவராக இவ்விருவரும் இருந்தாலொழிய இவ்வாறு முன்னவன் செயலை மறந்து பின்னவனைப் பாடக் காரண மில்லை, யார் இப்பத்தைப் பாடி இருப்பினும். 15. சேரர் மரபு - இது நிற்க, சேரமான் குடக்கோ நெடுஞ்சேர லாதன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியோடு பொருது மாய்ந்தான் என்று பரணர் பாடுகிறாரே அவன் யார்? பல புலவர்கள் எளிதான முறையில் இவனை இரண்டாம் பத்தின் நெடுஞ்சேரலாதன் எனக் கூறி விடுகின்றனர். அவர்கள் கூற்றை அப்படியே ஒப்புக் கொள்வதாயின் விளையும் பயனைக் காண்போம். பதிற்றுப்பத்துள் காணப்படும் சேரர் உரிமை வழி. (பக்கம் 158ல் காண்க) இப் புலவர் பாடிய அகம் 62ஆம் பாடலில் வரும் 'கயிறுகெழு தானைப் பொறையன் கொல்லி என வரும் அடி 8ஆம் பத்தின் தலைவனாய தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் குறிப்பது என்பர் அறிஞர். வேறு காரணங்களால் கொல்லி இவன்