பக்கம்:இன்றும் இனியும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து 159 காலத்தில்தான் சேரர் கைவசம் வந்தது எனவும் அறிய முடிகிறது. பதிற்றுப்பத்தை நீக்கிக் கண்டாலும், பரணர் புறம் 63ஆம் பாடலில் நெடுஞ்சேரலாதனையும், புறம் 369-ல் கடலோட்டிய குட்டுவனையும், எட்டாம் பத்தின் தலைவனாகிய தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையை அகம் 62ஆம் பாட்டிலும் பாடினார் என்று ஆகிறதே. இந் நிலையில் பதிற்றுப் பத்தின் மரபுவழியை ஒப்புக்கொண்டு குடக்கோ நெடுஞ் சேரலாதன் என்பவன் இரண்டாம் பத்தின் தலைவன் என்பதையும் ஒப்புக்கொண்டால், பரணர், 7 பேர் ஆட்சிசெய்யுங் காலம் முழுமையும் இருந்தார் என ஒப்ப நேரிடும். (எதிரேயுள்ள வமிசாவளியைக் காண்க) இதனை மறுக்கவேண்டுமாயின், ஆட்சி செய்யாமல் உண்டு உடுத்து இருந்த அரச குமாரர் களைப் பாடினார் எனக் கூறநேரிடும். 7 பேர் ஆட்சிக் காலம்வரை ஒரு புலவர் இருப்பதாயின், அவரை 'வேத நூற் பிராயம் நூறைத் தாண்டியவராகவே ஏற்க நேரிடும். இவ்வாறு கொள்ளாமல் இருக்க வேண்டு மாயின், பரணரால் குறிக்கப்பெற்ற இம் மூவரும் அடுத்தடுத்தும் சமகாலத்தும் வாழ்ந்தவர் என்றும் கொள்ள வேண்டும். கொள்ளவே, பதிகங் கூறும் உறவு முறை வீழ்ந்துவிடுதல் கண்கூடு. 16. ஆய்விலா நம்பிக்கை இத்துணைப் பெரிய தொல்லைகளும் ஏன் விளைகின்றன? பதிகத்தில் கூறப்பெற்றவற்றை அப்படியே உண்மை என்று ஏற்றுக்கொள்வ தனாலேயேயன்றோ? பழந்தமிழ் நாட்டில் ஒரு நல்ல பழக்கம் இருந்துவந்துள்ளதை யாரே மறுக்க முடியும்? 7ஆம் நூற்றாண்டின் பாடப்பெற்ற பாண்டிக்