பக்கம்:இன்றும் இனியும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ல் அ.ச. ஞானசம்பந்தன் கோவையை எடுத்து ஆளும் இறையனார் களவியல் உரையாசிரியரைச் சங்கச் சான்றோராகிய நக்கீரர் என்று இதுவரை இந்நாடு ஏற்றுவந்தது. அப்படியே நக்கீரர் முதலில் வாய்மொழியாற் கூறினார்; பின்னர் வந்தவர்கள் பாண்டிக் கோவைப் பாடல்களையே உரையாசிரியர் மேற்கோளாக எடுத்து ஆண்டு பேசுவதையும் காணலாம். அன்றியும், உரை கூறிய நக்கீரர் தமக்குப் பின்னர் வரும் ஆறு தலைமுறையார் களையும் யார் யர்ரிடமிருந்து உரையைக் கற்றார் என் பதனையும் முன்னரே கூறிவிடுதல் வியப்பினும் வியப்பே ! யாரோ ஒரு சிறந்த புலவர்தாம் இவ்வுரையை எழுதியிருத்தல் வேண்டும். எனினும், இத்துணைப் பெரிய நூலுக்குத் தாம் உரையிட்டதாகக் காட்டிக்கொள்ள வேண்டாத அப்புலவர் பெருந்தகை நக்கீரர் பெயரை அதற்குச் சூட்டியும் இருக்கலாம்! அன்றேல், அவருடைய பெயரும் நக்கீரர் என்றே இருந்திருக்கலாம். இறையனார் களவியல் நூல், தொல் காப்பியத்தினும் ஓரளவு மாறுபட்ட கொள்கை யுடையது. எனவே, தொல்காப்பியத் பொருளதி காரத்தினும் புறம்பாக அந்நூல் ஏன் தோன்றிற்று என்பதை மனத்துட்கொண்டு, யாரோ ஒருவர் ஆலவாயின் அவிர்சடைக் கடவுளே இந் நூற்பாக் களை இயற்றினான் எனக் கதை கட்டி விட்டார். அவர் அவ்வாறு கதைகட்ட வாய்ப்பாக இருந்தது களவியல் நூலாசிரியர் பெயரும் இறையனார்' என்று இருந்த ஒற்றுமை! . . . . . - : இதேபோலத்தான் ஐந்தாம் பத்தைப் பரணர் இயற்றினார் என்று கூறும் கூற்றும் ஆம். பரணர் என்ற