பக்கம்:இன்றும் இனியும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து 9 161 பெயரையுடைய பிற்காலப் புலவர் ஒருவர் இதனை இயற்றியும் இருக்கலாம். அஃது எவ்வாறாயினும், புறம், அகம், நற்றிணை, குறுந்தொகை முதலிய தொகுப்பு நூல்களிற் காணப்பெறும் பாடல்களை இயற்றிய பரணருக்கும் ஐந்தாம் பத்தைப் பாடிய பரணருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை, பெயர் ஒற்றுமை தவிர. (அதுவும் அவருக்குப் பரணர் என்ற பெயர் உண்மை யில் இருந்திருந்தால்) பதிற்றுப்பத்து முழுவதையும் ஒரு முறை கற்பாரும் எட்டுப் பத்துகளிலும் காணப்படும் சொல் ஆட்சி முதலியவற்றில் ஓர் ஒற்றுமையைக் காண்டல் கூடும். இவை அனைத்தும் ஒருவர் பாடியனவோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. தக்க ஆதாரங்கள் கிடைக்கும் துணையும்.இக் கருத்தை வலியுறுத்த வேண்டா. - - - - - பதிகத்தை நம்பி ஐந்தாம் பத்தைப்பற்றித் தொங்கிக் கொண்டிருக்கும் - ஐந்தாம் பத்தின் ஆசிரியர் பரணர் என்ற - கொள்கையை விட்டு விட்டால் இரண்டு நன்மைகள் ஏற்படும். முதலாவது, சேரன் செங்குட்டுவனும், கடல் பிறக்கோட்டிய குட்டுவனும் ஒருவனே என்று கூறத் தேவை இல்லை. ஒன்று எனக் கூறுவதால், செங்குட்டுவன் இளங் கோவடிகளின் கற்பனையில் உதித்தவன் என்று கூறுமளவிற்கு ஆராய்ச்சி நீண்டு விடுகிறது. ஏன்? பரணர் பாடிய பாட்டுதான் ஐந்தாம் பத்து எனக் கொண்டால் இம் முடிபு. சரியானதே; ஆனால், அக் கோட்பாடு எத்துணை இடையூறுகளை விளைவிக்கிற தென்பதைக் கண்டோம். ப்ரணர் என்ற பெயரை உடைய ஒரு பிற்காலப் புலவரோ, அன்றி வேறு பெயரையுடைய ஒருவரோ அப் பத்தை இயற்றி யிருத்தல் வேண்டும். - இ.இ.-11