பக்கம்:இன்றும் இனியும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ல் அ.ச. ஞானசம்பந்தன் 17. வடநாட்டுப் போர் மற்றொருவகையில் நோக்கினாலும் இக் கருத்து வலியுறுதலைக் காணலாம். அகம் 212ஆம் பாடலில் குட்டுவன் பெயரைக் குறிப்பிட்டு , அவன் கடற் போரைக் குறிப்பிடுகிறார் உண்மைப் பரணர். அதற்கு முன்னர் குறிப்பிட்ட 75 பாடல்களிலும் அரசர்களைக் குறிப்பிட நேர்ந்தால் அவர்கள் ஊரையும், பெயரையும், போர் செய்த இடத்தையும் குறிப்பிடு கிறார். ஐயம் ஏற்பட்டால், மேலே எண்ணிக்கை கொடுக்கப் பெற்றுள்ள பாடல்களைப் புரட்டிப் பார்க்கலாம். அவ்வளவு தூரம் கருத்துடன் அரசன் பெயரைத் தவறாமல் குறிப்பிடும் பரணர் பெருமான், அகம் 396ஆம் பாடலில் அரசன் பெயரைக் குறிப்பிடவே இல்லை. ஆனால், அவன் ஒரு சேர மன்னன் என்பதைமட்டும். விற்கொடியைக் குறிப்பதால் குறிப்பிடுகிறார். மீட்டும் ஒருமுறை பாடலைக் காண்போம்: - "ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசை - தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி யன்னவென் நலந்தந்து சென்மே." என்னும் பாடலைக் கூர்ந்து நோக்குவோமாக. "ஆரியர் அலறத் தாக்கி" என்றதாலேயே ஆரிய மன்னர்களுடன் போரிட்ட செய்தியைக் கூறிவிட் டாரே கவிஞர்; அவ்வாறிருக்க, மீட்டும் வெஞ்சின. வேந்தரைப் பிணித்தோன் என்று கூறவேண்டிய இன்றியமையாமை யாது?