பக்கம்:இன்றும் இனியும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து 163 ஆரியரை அலறத் தாக்கிய செயல் வேறாகவும், வெஞ்சின வேந்தரைப் பிணித்த செயல் வேறாகவும் இருந்தால்தான் இப் புலவரைச் சிறந்த புலவர் என்று கூறல் கூடும். எனவே, மூன்று செயல்கள் இப் பாடலிற் குறிப்பிடப்படுகின்றன: () சேரன் ஒருவன் ஆரியர் அலறத் தாக்கினான்; (2) பேரிசை இமயத்தில் விற்கொடியைப் பொறித்தான்; (3) அப்போரில் பேரிசை மன்னர் சிலரைப் பிணித்தான். இம் மூன்றாம் செய்தி ஓரளவு எண்ணவூட்டுச் (Suggestion) செய்வதாக உளதன்றோ! ஆரிய மன்னரைப் போரில் வென்று இமயத்தில் விற்கொடியைப் பொறித்து, ஆரிய மன்னர் இருவரைக் கட்டி அவர் தலைமேல் கல்லை ஏற்றி ஒரு சேரன் கொண்டு வந்ததை நினைவூட்டுவபோல அன்றோ உள்ளன. இப்பாடலின் அடிகள். அத்தகைய ஒரு சேரனைத் தானே. சிலப்பதிகாரம் குறிக்கிறது? அவ்வாறாயின், ஏனைய மன்னர்களை விடாமற் பெயர் குறித்த இப்புலவர் இம் மன்னனின் பெயரைக் குறிப்பிடவில்லை! ஏன்? இக் கேள்வி சிறந்ததுதான். ஆனால், விடையும் ஊன்றி தோக்கினாற் கிடைக்கும். ஏனைய அரசர்கள் செய்த போரெல்லாம் தமிழ்ந; டில் செய்தவையே. தமிழர் தமிழருக்குள் போட்டு மண்டையை உடைத்துக் கொண்ட கதைதான்; சங்கப் பாடல்களிற் பரக்கக் காண்கின்ற செய்தி. எனவே, அவர்கள் தம்முள் போரிட்டுக்கொண்டதைக் குறிப்பிடும் பொழுது பெயர்களைக் குறிப்பிடாவிடின் குழப்பமே விளையும். கரிகாலன் என்ற பெயருடைய இருவரையும் திருமாவளவன் என்ற பெயருடைய ஒருவனையும் நன்கு விளங்கிக்கொள்ளாமல் எத்தனை குழப்பம் விளைவித்துவிட்டோம். எனவே, தமிழ் நாட்டில்