பக்கம்:இன்றும் இனியும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 அ.ச. ஞானசம்பந்தன் தம்முள்ளேயே போரிட்ட மன்னர்கள் பெயர்களை விடாமற் குறிக்கிறார் கவிஞர். ஆனால், வடநாட்டிற் சென்று ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசை இமயத்தில் விற்கொடி பொறித்தவர் எத்தனை சேரர்? ஒருவன் தானே! எனவே, அவன் பெயரைக் கூறாமலே விட்டு விட்டார் பரணர், தமிழ்நாடு முழுவதும் அறிந்த பெரும்புகழ் படைத்தவன் அவனாகலான். வஞ்சியைக் குறிக்கும்பொழுது வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி' என்று கூறுவதனால், அச் சேரன் வெற்றிபெற்று மீண்ட காலத்தையடுத்து இப் பாடல் தோன்றி யிருக்கலாம் என்று நினைப்பதில் தவறு இல்லை. கடற்போர் செய்த குட்டுவனை நிலப் போரில் மிக்கவனாகப் புகழ்தல் எத்துணைப் பொருத்த மற்றது? புறம் 369ஆம் பாடலில் இவ் வருணனை வருகின்றது காணலாம்: "இருப்புமுகஞ் செறித்த ஏந்தெழில் மழைக்கண் கருங்கை யானை கொண்மூ வாக நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த வாள்மின் னாக வயங்குகடிப் பமைந்த குருதிப் பலியா முரசுமுழக் காக அரசராப் பணிக்கு மணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்புறு வல்வில் வீங்குநா னுகைத்த கனைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை ஈரச் செறுவயின் தேர்ஏ ராக ' விடியல் புக்கு நெடிய நீட்டிநின் (புறம்: 369) என வரும் அடிகள் அம் மன்னனுடைய போரைப் பற்றிய உருவகமாகும். கடல் பிறக்கோட்டியவன்