பக்கம்:இன்றும் இனியும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து 8 165 ஒருவனைப்பற்றி இத்தகைய கற்பனையும் உருவகமும் தோன்றக் காரணமில்லை. எனவே, இப் பாடல், அகப் பாடலில் அப் புலவர் பெயர் குறிப்பிடாமல் கூறிய மன்னனைப்பற்றியதே ஆகும் என நினைப்பதில் தவறில்லை எனத் தோன்றுகிறது. பரணரால் இவ்விரண்டு (அகம், 396, புறம், 362) பாடல்களிலும் குறிக்கப்பெற்றவன் செங்குட்டுவனைப் புகழ்ந்த புலவர் பரண ரல்லர் என்பதை வலியுறுத்தவே இதுகாறுங் கூறப்பெற்றது. இதை ஏற்றுக்கொண்டால் பதிகம் கூறும் அனைத்தும் பொருத்தமற்றவை, புலவர் பெயர் கூறுவது உட்பட என்பது நன்கு விளங்கும். 18. முடியுண்மை பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தைப் பாடிய புலவரின் பெயரை நாம் அறிய முடியவில்லை ஆயினும், அதிற் புகழப்படும் குட்டுவ்ன் சிலப்பதி காரக் குட்டுவன் என்று நினைந்து இடர்ப்பட வேண்டியதில்லை. இதில் குறிக்கப்பெறுபவன் பெயரும் குட்டுவன்தான். அவன் செய்த வீரச்செயல் கள் இரண்டு. முதலாவது அவனியற்றிய கடற்போர். ஆனால், பதிற்றுப்பத்துக் கூறுவதுபோல் அவனுக்கு முன்னும் பின்னும் கடற்போர் இயற்றியவர் இல்லை என்று கருதுதல் தவறு. அவனுக்கு முன்னோ பின்னோ நெடுஞ்சேரலாதன் என்பவனும் கடற்போர் செய்துள்ளான் என்பதை அதே பதிற்றுப்பத்தின் மற்றொரு பகுதியால் (2ஆம் பத்து அறிகிறோம் இப் பதிற்றுப்பத்தைப் பல புலவர்கள் பாடியிருப்பின், இவ்வாறு முரணும்படி பாடமாட்டார்கள். ஒரே புலவன் பாடியிருப்பின், முன்னரே குறிப்பிட்டோமே என்ற கருத்தால், இவ்வாறு நெடுஞ்சேரலாதன் செயலை விட்டுவிட்டுக் குட்டுவனைப்பற்றி மட்டும்