பக்கம்:இன்றும் இனியும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 % அக ஞானசம்பந்தன் பாடியிருத்தல்கூடும். இவ்வகை முரண்பாடும் இப் பாடல்களை ஒரே புலவன் இயற்றினானோ என்ற ஐயத்தை வளர்க்க உதவுகிறது. கடற்போரையன்றி இக் குட்டுவன் செய்ததாக மற்றொரு வீரச்செயலும் பேசப்படுகிறது. பதிற்றுப் பத்தில். அறுகை என்பவனுக்கும் மோகூர் மன்னன் ஒருவனுக்கும் போர் நிகழ்ந்திருக்கிறது. அப் போரில் குட்டுவன் நண்பனாகிய அறுகை தோற்று ஓடி ஒளித் துக்கொண்டான். தனக்கு வந்து உதவுமாறு அவன் குட்டுவனை வேண்டவுமில்லை. அவ்வாறிருந்தும், அறுகைக்காகப் பரிந்துகொண்டு குட்டுவன் மோகூர், மன்னன்மேல் படையெடுத்துச் சென்று அவனை வென்றான். இச் செய்தியை 4ஆம் பாடல் குறிக்கின்றது. "நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை சேனன் ஆயினுங் கேளென மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்கு அரண்கள்தா வுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன மோகூர் மன்னன் முரசங் கொண்டு நெடுமொழி பணித்தவன் வேம்புமுத றடிந்து" (பதிற்று. 44) இதனால் நண்பனாகிய அறுகை தன்னை, அழைக்காதவிடத்தும் அவன்பொருட்டுச் சென்ற குட்டுவன் நண்பு பாராட்டும் இயல்பு நன்கு வெளிப் படுகின்றது. இதுகாறுங் கூறியவாற்றால் சில உண்மைகள் வெளிப்படும். ஐந்தாம் பத்தின் ஆசிரியர் பரணர் அல்லர். பதிகம் முற்றிலும் தள்ளத்தக்கதேயன்றிக் கொள்ளத்தக்கதன்று. சங்கப் பாடல்கள் பாடிய பரணரின் வேறானவர் ஐந்தாம் பத்தின் ஆசிரியர் என்றால், ஏன் செங்குட்டுவன் செய்தி இதில் இடம்