பக்கம்:இன்றும் இனியும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை நயம் 5 அழகைச் சொல்ல வந்த கவிஞன், அந்த அழகைக் கற்பனையில் கண்டு அதனுடன் அமையாமல் தான் கண்ட காட்சிக்கு வடிவு கொடுக்கவும் விரும்புகிறான். "மையோ, மரகதமோ, மறிகடலோ மழை முகிலோ என்று தொடங்கிய கவிஞன், இத்தனை சொற்களைப் பயன்படுத்தியுங்கூட அந்த அழகை முழுமையும் தான் கூறமுடியவில்லை என்ற உண்மையை உணர்கின்றான். வேறு எத்தனை சொற்களைப் பயன்படுத்தினும் அந்த அழகை முழுவதும் வருணிக்க முடியாது. அதாவது சொல்லால் வருணிக்க முடியாது என்ற பேருண்மையை உணர்கின்ற கவிஞன், "ஐயோ! இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான் !" என்று கூறுமுகத்தான் தன்னுடைய ஆற்றாமையைத் தெரிவிக்கின்றான். இரக்கக் குறிப்பை உணர்த்தும் "ஐயோ' என்ற சொல் நான்காவது அடியின் முதலில் பயன்படுத்துவதன் மூலமாக மூன்றாவது அடி முழுவதிலும் பயன்படுத்திய உருவகத்திற்கு ஒப்புமை இல்லாத ஒரு தனிச்சிறப்பைக் கவிஞன் நல்கி விடுகின்றான். "உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை" என்பது தொல்காப்பியம். அதாவது, ஒப்புமை சொல்ல வேண்டிய காலத்தில் உயர்ந்த பொருள்களோடு ஒன்றை உவமிக்க வேண்டுமே தவிரத் தாழ்ந்த பொருள்களோடு உவமித்தல் ஆகாது என்பதே இதன் கருத்தாகும். ஒருவனுடைய சிறந்த வல்லமைக்கு உவமை கூறவேண்டுமானால், யானையைப் போன்ற வல்லமையுடையவன் என்று கூற வேண்டுமே தவிர. எருமை அல்லது பன்றி போன்ற வல்லமையுடையவன் . கம்பராமாயணம் - 1926