பக்கம்:இன்றும் இனியும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து 9 187 பெறவில்லை என்ற வினாவிற்கே வழி இல்லையாய் விடும். இப் பத்தின் தலைவன் குட்டுவன் என்ற பெயருடைய ஒரு சேரன். இவன் நெடுஞ்சேரலாதன் என்ற இரண்டாம் பத்தின் தலைவனுக்கு மைந்தன் என்பதும் (பதிகம் தவிர) ஆதாரமில்லாக் கூற்றேயாகும். ஒரு மன்னனைப் புகழ வேண்டுமாயின், அவன் வீரச் செயல் ஒன்றும் நிகழ்த்தாவிடத்தும் அவன் முன்னோர் செய்த வீரச்செயலைப் பெரிதாகக் கூறி அது செய்தான் மகனே! மருகனே! வழித் தோன்றலே! என்று கூறும் புறப்பாட்டல்களை யாரே அறியார்? அவ்வாறிருக்க, நெடுஞ்சேரலாதன் மகனாகக் குட்டுவன் இருப்பானேய்ாகில், அவன் தந்தையின் கடற்போர்த் திறனை எந்தப் புலவன்தான் விட்டு வைப்பான்? அது பழந்தமிழ்க் கவிஞர் மரபுமன்று. எனவே, இவர்கள் தந்தையும் மைந்தனும் என்று கூறுவதும் பொருத்தமற்றதே. சேரநாட்டில் கிடைக்கும் செப்பேடுகளிற் பரணன் கானம், கண்ணன்காடு, காக்கையூர் என்ற பெயருடைய ஊர்கள் காணப்படுதலின், ஐந்தாம் பத்தைப் பரணர் பாடினார் என்று இத்துணை முரண் களையும் பொருட்படுத்தாமற் கூறவேண்டிய கடப் பாடின்று. . - - இப் பதிற்றுப்பத்துப் பாடல்கள் யாரால் பாடப் பெற்றிருப்பினும், இப் பாடல்கள் ஓரளவு கவிதை நயம் பொருந்தியவைதாம். ஏனைய சங்கப் பாடல்களில் காணப்பெறும் ஒசைநயமும், சொல்லாட்சிச் சிறப்பும், கற்பனைத்திறமும் இப் பாடல்களிற் காணப்பெற வில்லை. எனினும், பிற்காலப் பாடல்கள் பலவற்றை நோக்க இவை நல்ல கவிதைகள் என்றே கூறலாம். ஒவ்வொரு பாடலிலும் காணப்படுகிற நல்ல அடி