பக்கம்:இன்றும் இனியும்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 அ.ச. ஞானசம்பந்தன் ஒன்றை எடுத்து அப் பாடலின் தலைப்பாக மிகவும் பிற்காலத்தில் யாரோ இட்டிருக்கின்றனர். “சுடர்வீ வேங்கை' என்ற முதற் பாட்டின் தலைப்பு வரைசேர்பு எழுந்த சுடர்வி வேங்கை என்ற அடியிலிருந்து எடுக்கப்பெற்றுள்ளது. யானைக்கும் புலிக்கும் என்றுமே பகைமை உண்டு. சில சந்தர்ப் பங்களில் வேங்கை மரத்தின் பூக்களையே வேங்கைப் புலி என்று யானை நினைந்துகொள்வதுண்டு. 'மருண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்' என்ற முதுமொழிக்கிணங்க வேங்கையினிடம் சினங் கொண்ட யானைக்குக் காணுமிடந்தோறும் வேங்கைக் காட்சியே கிடைக்கிறது. எனவே, தன் பகையாகிய வேங்கைப்புலி மரத்தின்மேல் இருக்க நியாயமில்லை என்பதைக்கூட மறந்துவிட்டுப் பூக்கள் நிறைந்த வேங்கை மரத்தின் கிளைகளைத் தன் துதிக்கையால் வளைத்து ஒடித்துத் தலையின்மேல் வைத்துக்கொண்டு பிளிறுகிறதாம். அது போர் மறவர்கள் போர்ப்படை தாங்கிப் போர்க்களத்தில் நின்று ஆரவாரஞ் செய்வது போல் இருக்கிறதாம். இவ்வழகிய உவமை முதற் பாடலில் இடம் பெறுகிறது: "மறப்புலிக் குழுஉக்குரல் செத்து வயக்களிறு, வரைசேர்பு எழுந்த சுடர்வீ வேங்கைப் பூவுட்ைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதள் மாயிருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச் சேஎ ருற்ற செல்படை மறவர் தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்" பதிற்று. 41 பகையரசர் தலைகளைத் தோமரத்தால் இடிப்பதை உவமை கூறவந்த கவிஞர், மிளகை