பக்கம்:இன்றும் இனியும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம பத்து 169 உலக்கையால் இடிப்பதை உவமிக்கின்றார். இவ்வுவமை பாடியகாரணத்தாலேயே இப் புலவரைச் சேரநாட்டைச் சேர்ந்தவரென்றும் பரணர் அல்லரென்றும் கூறி விடலாம். "...ιιιιιιιιιιιιιιιιιιιιιιιιιι... தெவ்வர். மிளகெறி யுலக்கையின் இருந்தலையிடித்து" (பதிற்று. 41) என்பதால், சேரநாட்டில் பிறந்தவர்கட்கே இயல்பாய் வருவது இவ்வுவமை என்பதைத் திறனாய்வாளர் அறியலாம். தமிழ்நாட்டின் பிறபகுதிகளிற் காணப்படாத 'மிளகு எறி உலக்கை பற்றிப் பாடிய இவ்வாசிரியர் மற்றொரு புதிய பழக்கத்தையும் இரண்டாம் பாடலில் குறிப்பிடுகிறார். நல்ல பூக்களை மாலையாகத் தொடுத் தணிதல் தமிழ்நாட்டு மரபாயினும், இஞ்சியை இம் மாலையுள் வைத்துத் தொடுத்தல் வேறு பாடல்களிற் காணாத புதுமையாம். பத்துப்பாட்டிற் பல விடங்களிற் பேசப்படினும், இஞ்சி, மாலையில் இடம் பெற்றிலது ஆனால், இரண்டாம் பாட்டில் இஞ்சி விராய பைந்தார் பூட்டி என்று இவ்வாசிரியர் பாடுவது இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவரல்லர் என்பதையே குறிக்கிறது. r மகளிரை வருணிக்கும் 6ஆம் பாட்டின் முதல் 4 வரிகளும் சிறந்த ஒசைநயம் பெற்றுள்ளன. மெல்லிய தன்மையுடைய மகளிர் என்று சொல்லால் கூறாது சொற்களின் ஒசையால் அக் கருத்தைப் பெற வைப்பது. சிறந்த கவிதையின் இலக்கணங்களுள் ஒன்று. "இழையர் குழையர் நறுந்தண் மாலையர் சுடர்நிமிர் அவிர்தொடி செறித்த முன்கைத்