பக்கம்:இன்றும் இனியும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 ல் அ.ச. ஞானசம்பந்தன் திறல்விடு திருமணி இலங்கு மார்பின் வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்" - (பதிற்று. 46) இப்பகுதியின் முதலடியில் வரும் 'ழ'கர ஒலியால் அவர்கள் மென்மைத் தன்மையைப் பெறவைக் கின்றார் ஆசிரியர். சுடர்நிமிர் அவிர்தொடி செறித்த முன்கை என்ற அடியில் வரும் வல்லோசையால் அவர்கள் அணிந்திருந்த வளையல்களின் ஒசையைக் காட்டுவதோடு, கடினமான பொன்னால் செய்யப் பெற்றுக் கையில் இறுக்கமாக அணியப்பெற்றிருந்தன அவை என்ற குறிப்பையும் பெறவைக்கின்றார். சொற் பொருளாலன்றி ஓசையால் இப்பொருளைக் குறிப்பாகப் பெறவைப்பதைக் கவிஞன் வன்மைகளுள் ஒன்றாகக் குறிப்பிடுவர் திறனாய்வாளர். கடலின் ஓசை தூரத்தே இருந்து கேட்டால் ஒரு வகையாகவும் கேட்கும். தூரத்தே இருந்து கேட்கும் பொழுது 'ஒ' என்ற ஒலியும் அணித்தே நிற்கையில் அலைகள் வீழ்ந்து உடைவதால் கடபட' என்ற ஒலியும் கேட்கும். வ்வொலி வேறுபாட்டை இரண்டு அடிகளில் தெரிவிக்கிறார் கவிஞர். - "கோடுநரல் பெளவங் கலங்க வேலிட்டு உடைதிரை பரப்பில் படுகடல்......." (பதிற்று. 46) என்ற பகுதியில் கோடுநரல்', 'வேலிட்டு' என்று முதலும் முடியுமாக உள்ள சொற்கள் 'ஒ' ஒலியையும் 'உடைதிரை', 'படுகடல் என்ற சொற்கள் கடபட' ஒசையையும் தருதல் இசையுணர்வுடையார்க்குப் புலனாம். - - ஐந்தாம் பத்துப் பாடல்களிலும் இங்ங்ணம் பல அழகுகளைக் காண்டல் கூடும்.