பக்கம்:இன்றும் இனியும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 இலக்கியப் பண்பு மன்னா உலகத்து மன்னுதல் குறித்து ஆன்றோர்கள் இயற்றிய நூல்கள் அனைத்தும் இலக்கிய மென்றே கூறப்படும். இலக்கியம் என்ற சொல்லின் கண் பாடல், வசனம், நாடகம் என்ற அனைத்தும் அடங்கும். இவை மூன்றும் இதனுள் அடங்குமேனும், இவற்றுள் சிறந்து நிற்பன செய்யுட்களே. ஏனைய இரண்டனையும்விடச் செய்யுட்கள் சிறப்படையப் பல காரணங்கள் உள. சுருங்கக் கூறல், விளங்கவைத்தல், உணர்ச்சி யூட்டல், இராகத்திற்கு ஒத்து வருதல் முதலியன அவற்றுட் சிலவாம். இச்செய்யுட்களையும் இரண்டு வகையாகப் பிரித்தல் கூடும். முதல் வகையைப் பாடல்கள்' என்றும் இரண்டாம் வகையைச் செய்யுட்கள் என்றுங் கூறலாம். பாடல்கள் என்று அழைக்கப்படுவனவும் செய்யுட்களும் உருவத்தானும் வடிவத்தானும் ஒத்திருப்பினும், மேலே கூறிய காரணங்களால் தம்முள் மாறுபாடுடையன. முன்னையது பாடவேண்டும் என்றதொரு கட்டுப்பாட்டுக்கு இணங்கிப் பாடப் படுவதன்று. செய்து தீரவேண்டுமென்றவிடத்துச் செய்யப்படுவதே செய்யுளாம். முன்னையது யாம் கூறியபடி அமைவதோடன்றிப் பாடுகின்ற ஆசிரியனது மன