பக்கம்:இன்றும் இனியும்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 அ.ச. ஞானசம்பந்தன் நிலையையும் பொறுத்து வெளிவருவதாம். இதனைத் தான் நாவின் வேந்தர் நன்குணர்ந்து 'உளங்கனிந்த போதெலாம் உவந்து உவந்து பாடுமே எனக் கூறினார். எனவே, பெரிதும் கவிஞனின் மன நிலையை ஒட்டி வெளிவரும் இப் பாடல்கள் என்று கூறின மாத்திரையானே, அவை கட்டுப்பாட்டிற்கு அடங்காதவை என்ற உண்மை தானே பெறப்படு கின்றதன்றோ! ஆகவே, இப் பாடல்களையும் செய்யுட் களிையும் உணர்வோடு படிப்போர்க்கு இவற்றிடையே உள்ள வேற்றுமை தெற்றென விளங்கும். உணர்வோடு படிப்பதாவது என்னையெனின், பாடல்களை அவற்றிற்காகவே பயில்வதாம். வேறு பயன் கருதிக் கற்றவழிக் கவிஞனின் உட்கோளை உணர முடியாதுபோய்விடும். அதாவது, சிறந்த பாடல்களைப் படிப்பதால் உண்டாம் இன்பமே படிப் பதன் கைம்மாறாம். எனினும், மனப்பண்பை மாற்றி யமைத்தல் முதலிய பிற தொழில்களும் பாடல்கட்கு உண்டேனும், சிறந்ததாகக் கருதப்படுவது, படிக்கும் பொழுது தன்னை மறந்து அனுபவிக்கும் இன்பமேயாம். இது. மேலைநாட்டாருக்கும் ஒப்ப முடிந்த தொன்றாம். இக் கருத்தையே வலியுறுத்துவான் வேண்டிக் கம்பநாடரும் செஞ்சொற் கவியின்பம் எனக் கூறியிருத்தல் காண்க. இத்தகைய பாடல்களைப் பயிலும்போது, படிப்போர் மனம், அவர் காலத்திய உலகம், நடை உடைபாவனைகளில் ஈடுபட்டிருக்குமேயானால், அப் பாடலுலகிற் புகுந்து முழு இன்பத்தை அடைய முடியாதென்பது ஒருதலை. காவியம் என்பதே ஒரு தனி உலகாக, ஏனைப் புறவுலகின் துணை வேண்டப்