பக்கம்:இன்றும் இனியும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியப் பண்பு 173 படாத நிலையில் இருப்பதாகலின், அதன்கட் புக விரும்புவோர் மனத்தைத் துய்மைப்படுத்தி அக்காவிய உலகிற் புகினன்றி அதனை அனுபவித்தல் இயலாதாம். பாடல்களுக்குரிய மேலே குறிக்கப்பட்ட தன்மை யுடைய பாடல்கள் எதுவாயினுஞ் சரி, அவை பெருமை பெறுவது எதனால் என்று ஆராயப் புகின், அது சற்று இயலாத காரியமேயாம். உதாரணமாக, “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் (112)என்ற புறப்பாட்டை நோக்குவோமாயின், அதன்கண் உள்ள சுருங்கக் கூறி விளங்கவைக்கின்ற அழகும், தந்தையை இழந்து வருந்தும் மங்கையர் துயராம் அவலச் சுவையும், வென்றெறி முரசின் வேந்தர் என்ற வஞ்சப் புகழ்ச்சியும் படிப்பாரது மனத்திற்பட்டு உருக்கா மற்போகா: ஆனால், மேலே கூறிய பொருள், பாடலின் எப் பகுதியில் உள்ளது? சொற்களோ யாரும் அறிந்த மிக எளிய சொற்கள். கூறப்பட்ட செயலோ யாவரும் அறிந்ததே. பெரிய கதையோ, காப்பியப் பொருளோ ஒன்றும் ஆண்டில்லை. அவ்வாறாக, இத்தனை அழகும். யாண்டுத் தோன்றியது? அது பாடுவோரின் திறத்தில் தோன்றிற்று என்று கூறுவதே ஒருவகை விடையாம். அவ்வாறின்றி..மேலே கூறிய ஒன்றால் இப் பாடல் சிறப் படைந்ததெனக் கொள்ளின், அது தவறாகும். பாடப் படுகின்ற பொருளால் பாடல் சிறப்படைகின்றது. எனக் கூறுவதும் பொருந்தாது. மேலே கூறிய பாடலே இதற்குச் சான்றாம். பெரிய பொருளை வைத்துங்கூடச் சாதாரண மனிதன் சாதாரணச் செய்யுளைத்தான் செய்வான். ஆனால், கவிஞன், பொருளெனப் பிறரால் மதிக்கப்படாத சிறிய பொருளை வைத்தும் யாவரும் வியக்கத்தக்க பாடலைப் பாட இயலும். அதனாலே இத்தகைய பாடல்களில், சொல்லமைப்போ, அன்றி