பக்கம்:இன்றும் இனியும்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ல் அ.ச. ஞானசம்பந்தன் வேறெதுவோ சிறப்பைத் தருவதில்லை. உண்மையைக் கூறுமிடத்து, இப்பாடல்களில் மேலே கூறிய பாகுபாடு கள் செய்வதும் இயலாத காரியம். இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் (188) என்ற அறிவுடை நம்பியின் பாடலைப் படிக்கும் பொழுது, உண்மையாகவே குழந்தை இல்லாதவரும் தமக்கு ஒரு குழந்தையைக் கற்பனை உலகிலேனும் உண்டாக்கிக்கொண்டு, அது மேலே கூறியபடி செய்வதாக நினைத்து மகிழ்வர். இவ்வெண்ணங்கள் படித்துச் செல்லும்போதே உண்டாகின்றனவேயன்றி, ஒவ்வொரு சொல்லையும் படித்துப் பிறகு கண்ணை மூடிக்கொண்டு அச் சொல்லின் பொருளைச் சிந்தித்து யாரும் உணருவ தில்லை. இத்தகைய பாடல்களில் ஒரு சொல்லை மாற்றி யமைத்தோ, அன்றி அடியைப் பெயர்த்தோ கூறிப் பார்க்கின் உண்மை விளங்கும். உண்மைப் பாடல்களை நன்கு பழகிய செவிகள் அம் மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இசையில் 'அபசுரம் என்பது தோன்றும் பொழுது என்ன மனோநிலை உண்டாகிற தோ, அதுவே ஈண்டும் உண்டாகக் காணலாம். சொற் களின் ஒசையும் பொருளமைதியும் ஒருங்கே ஈண்டுத் தோன்றுவதனால்தான் இவற்றைப் பாடல்கள் எனக் கூறுகிறோம். அக் கவிஞனையல்லாது வேறு யாரும் அங்ங்ணம் அமைக்கவியலாது என்றும் கூறுகிறோம். அத்தகைய பாடல்களைப் படிக்கையில், கவிஞன் கூறவந்த பொருளைப் பிறர் உணருமாறு கூறிவிட்ட தான ஓர் உணர்ச்சியும், இதுவே நாம் தேடி அலைவது, அதனை ஈண்டுக் காண்கின்றோம் என்றதோர் உணர்ச்சியும் தோன்றுகின்றன. காரிகை கற்றுக் கவி