பக்கம்:இன்றும் இனியும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியப் பண்பு 9 175 பாடி, எதுகை மோனைக்கு இடருற்று, சதுரகராதியின் உதவியைத் தேடி அமைக்கப்பட்டனவும் செய்யப் பட்டனவுமான செய்யுட்கள் பிறரைக் கவராததன் காரணம் இதுவே. கடவுளைக் கூறவந்த ஒரு கவிஞன், கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பு என்று கூறினான். அவனுக்குப் பிறகு 2000 ஆண்டுகள் கழிந்து படிக்கும் நாம், படித்த உடனே மனத்தில் தேடியதைக் கண்ட மகிழ்ச்சி அடைகின்றோம். மேலே கூறிய நான்கு சீர்களை எத்தனை சொற்களாலே வேண்டுமாயினும் கூறிப் பார்ப்போம். அப் பொருளமைதியை, அச். சொல்லமைதியின் பண்பை நாமடைதல் இயலாத காரியம். அங்கேதான் உண்மைப் பாடலின் பண்பை யும் அதனை இயற்றிய கவிஞனது மன அமைதியையும் காண்கின்றோம். நம்மை ஒத்த மனிதனாகப் பிறர்க்கு அவன் காணப்படினும், உண்மையில் நம்மைவிடப் பல படிகள் மேலே இருப்பவன் அவன் என்ற உண்மை விளங்குகிறது. - இத்தகைய சிறந்த பாடல்கள் அப் புலவன் மனத்தில் முன்னமேயே கருக்கொண்டிருந்த பெருங் கருத்தின் உருவம் எனக் கொள்வோமேயானால், அது பொருத்தமிலாக் கூற்றாய் முடியும். பாடல்களைப் பாடுவதன்முன் உருவகிக்க முடியாது பனிப்படலம் போன்று கவிஞன் மனத்துட் கிடக்கின்ற உணர்ச்சியே, பிறகு அவனது ஆக்குந் திறத்திற்கேற்ப ஒரு சொற் போர்வை போர்த்து வெளிவருகிறது. முன்னரே அவன் பாடற் பொருளை உணர்ந்திருப்பானாயின் அதனைப் பாடியே இரான். தன்னைச் சிறுவன் என நினைத்து எள்ளி, ஏழு அரசர்கள் தன் நாட்டை வளைத்தனர்