பக்கம்:இன்றும் இனியும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அ.ச. ஞானசம்பந்தன் என்று கூறுதல் ஆகாது. வல்லமை என்பதை மட்டும் எடுத்துக்கொண்டால் பன்றி, எருமை என்ற இரண்டும் உவமைக்குத் தகுந்த பொருள்களாயினும், அவை தாழ்ந்த விலங்குகளாதலின் உவமைக்கு ஏற்றவை அல்ல. இதையும் மீறி எங்காவது ஓரிடத்தில் கவிஞன் தாழ்ந்த உவமையைக் கையாளுவானேயாகில் அதற்கு ஒரு தனிக் கருத்து இருத்தல் வேண்டும். அதுவும் கம்பன், சேக்கிழார் போன்ற கவிச்சக்கரவர்த்திகள் இத்தாழ்ந்த உவமையைப் பயன்படுத்துவார்களே யானால் நிச்சயமாக அதில் ஓர் உட்கருத்து அடங்கி இருக்கும். எனவே, கவிதையைப் படிக்கின்றவர்கள் இக் கருத்தை உணர்ந்து, சிந்திக்க முற்படவேண்டும். கண்ணப்பர் என்று கூறப்பெறும் திண்ணனார், நாணன் என்ற வேடனுடன் காளத்தி மலைமேல் ஏறினார். அங்குக் குடுமித் தேவரைக் (காளத்தி மலை மேலுள்ள இறைவனின் பெயர்) கண்டு அவரை அணைத்துக்கொண்டு மயங்கி நின்று இறங்கி வரவும் மனமில்லாது மலையிலேயே நெடும்பொழுது தங்கி விட்டார். இறுதியில் நாணன் உடன் இருப்பதை அறவே மறந்து, மலையில் இருந்து கீழே இறங்கி வருகிறார். திண்ணனாருடன் வேட்டைக்குச் சென்ற காடன் என்ற மற்றொரு வேடன், திண்ணனார் காலம் தாழ்ந்து வந்ததைக் கண்டு சினந்து, "என் செய்தாய் திண்ணா நீ?" என்று கேட்கின்றான். ஆனால், அவன் கேட்ட கேள்வியைக் காதிற்கூடத் திண்ணனார் வாங்கிக் கொள்ளவில்ல்ை. இதனிடையில் திண்ணனாருடன் மலை ஏறிச் சென்றிருந்த நர்ணன், காடனுக்கு விடை கூறுபவனாகிக் கீழ்கண்டவாறு பேசுகின்றான்.