பக்கம்:இன்றும் இனியும்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியப் பண்பு 6 177 இத்தகைய அருங்கருத்துகளைக்கூட வசனத்தில் கூறின், அவை இத்துணைப் பெருமை அடைய இயலாது. பாடல்கள் மட்டுமே பொங்கி எழும் கருத்து களைக் கொண்டு வருகின்றன. உணர்ச்சியைத் தட்டி எழுப்பி உணர்ச்சி வடிவாகவே வெளிவரும் தன்மை பாடல்களுக்கு மட்டுமே உண்டு. மனித மனம் எவ்வளவு உயரம் செல்ல முடியுமென்பதை அறிய வேண்டின், பாடல் வழியாகவே காண இயலும். பாடல்கள் எனப்படுபவை ஏனையோர் கண்டுங் காணாத பொருள்களைக் காணுமாறு செய்வதாம். எனவே, மனப்பண்பை மாற்றம் செய்தல், உணர்ச்சி யூட்டுதல், தளர்ச்சி யடைந்த மனத்திற்கு ஊக்கம் அளித்தல் முதலான தொழில்களைச் செய்வதும் பாடல்களின் இரண்டாவதான தொழில்களாம். இவற்றையெல்லாம் செய்வதால், பாடல்கள் வாழ்க் கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனக் கூறுதல் மிகையாகாது. வாழ்க்கை எத்தகையதா யிருக்கவேண்டும் எனக் கூறும் பெரும் பாடல்கள் எல்லாம் பாடுவோனது மனத்திட்பத்தால் பெருமை யடைவனவேயாம். o: - இதுகாறும் பொதுவாகப் பாடல்களைப்பற்றிய பண்புகளிற் சில கண்டோம். இனி, புறநானூற்றிற் காணப்பெறும் உண்மைகளிற் சிலவற்றைக் காண்போம். புறத்தைப்பற்றி முன்னர்ச் சில உண்மை கள் அறியப்பட்டுள்ளன. இவற்றிற் காணப்படும் பாடல்கள் எல்லாம் பாடல் வகையிற் சேர்ந்தன வேயாம். இவற்றைப் பாடியவர் பலர். பல ஊர்களைச் சேர்ந்தோர். ஒவ்வொருவரும் காவிய உள்ளம் படைத்தவராயினும் பல காலத்து வாழ்ந்தவராவர். இவருட் சிலரே ஒரு காலத்து வாழ்ந்தவர். இவர்கள் இ.இ.-12