பக்கம்:இன்றும் இனியும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 அ.ச. ஞானசம்பந்தன் பாடிய அளவாற் சிறியனவும் பெரியனவுமான இப் பாடல்கள் நாம் என்றுங் கண்டுங் காணாத பொருள் களையும் அவற்றின் தன்மைகளையும் எடுத்து விளக்கு வனவாகும். பாடலுண்மை (Poetic truth) என்று சொல்லப்படும் பண்பு இப் பாடல்களில் யாண்டும் மிளிரக் காணலாம். அதாவது, இயற்கையின் தன்மையையோ, அமைப்பையோ, தோற்றத்தையோ, அல்லது மனித மனத்தின் இயற்கையையோ எடுத்து விளக்க வருங்கால் அவற்றின் உண்மைத் தன்மைக்கு மாறுபடாதபடி புலவன் கூற்று இருத்தல் வேண்டு மென்பதாம். இது ஏன் சிறந்ததாகக் கருதப்படு கின்றதென ஆராயின் அதன் உண்மை விளங்கும். பாடல்கள் அடிப்படையில் வாழ்க்கையின் நிறைவு குறைவு கூறும் ஒரு கருவியாய் முடியும். பாடல்கள் பெருமையடைவதெல்லாம், வாழ்க்கையின் ஓயாத வினாவாகிய எவ்வாறு வாழவேண்டுமென்பதற்குத் தரப்படுகின்ற விடையைப் பொறுத்ததேயாம். அது புலவனுடைய அறிவு, ஆராய்ச்சி, அனுபவம், கருவில் திருவுடைய தன்மை (genius), விசால நோக்கம், மன்ப்பான்மை, மன ஆழம் முதலியவற்றைப் பொறுத் துள்ளது. ஆகவே, இவற்றால் நிரம்பப் பெற்றவனும் வாழ்க்கையின் சிக்கை அறுக்க முயல்பவனும் ஆகிய ஒருவன் பாடல்கள் இயற்ற முற்படுவானேயாயின், அவை பெருமையுடையனவாய்த் திகழும். மேலும், வாழ்க்கையின் வினா, உலகந் தோன்றிய காலந்தொட்டு இருந்துவருகிறது. இதுகாறும் அதற்கு முடிந்த ஒரு விடைகண்டார் யாருமிலர் என்றே துணிந்து கூறலாம். தீர்க்கதரிசிகளும் கவிகளும் அவரவர்கள் தன்மைக்கேற்ப இவ் வினாவின் அல்கொரு பகுதிக்கே விடை தந்து போயினர். எனவே,