பக்கம்:இன்றும் இனியும்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியப் பண்பு 179 அவருள் சிறந்தவரை எவ்வாறு பொறுக்குவோம் என ஆராயின், அவர்கள் விடை எவ்வளவுக்கெவ்வளவு உண்மையின் பக்கத்தில் வருகிறதோ அவ்வளவுக் கவ்வளவு அவர்களது பெருமை விரியும். ஆகவே, கால வேற்றுமையால் இவர்கள் பெருமை உண்மையிற் குறைவதில்லை. அதற்கு மாறாக, அது என்றும் நின்று தனது பெருமையை எக் காலத்தும், எந் நாட்டிலும் உணர்த்திக்கொண்டே யிருக்கும். எனவே, அப்படிப் பட்ட சிறப்புடையன இப் புறப்பாடல்கள் என்னலாம். எனவே, பலர் இயற்றிய இவற்றை objectivepoetry என்று மேலைநாட்டார் கூறும் தொகுதியில் ஒருவகையாகச் சேர்க்கலாம். இப் பாடல்கள் எல்லாம் ஆசிரியப் பாவால் ஆனவை. ஆசிரியப்பாவிற்குள்ள தனிச் சிறப்பென்னவெனின், தாளம் முதலிய கட்டுப்பாட்டிற்கு உள்ளடங்கி நடவாது மனிதனின் எண்ணம் எவ்வாறு விரைந்தெழுகின்றதோ அதன்வழி வருவதாகும். தன் மனத்தில் கருவுற்றிருக்கும் கருத்தை ஆசிரியன் வெளியிட முற்படுகையில் இசைக் கட்டுப் பாடும், தாளக் கட்டுப்பாடும், எதுகை மோனைக் கட்டுப்பாடும், இலக்கணக் கட்டுப்பாடும் அவை தடையின்றி வெளிவருவதற்குத் தடை செய்வனவாய் உள. ஆகவே, அவ்வகைக் கட்டுப்பாடுகள் மிகுதியும் இல்லாததும் பெரிதும் எண்ணம் செல்கின்றவழியே செல்வதுமான ஆசிரியப்பாவால் இப் பாடல்கள் அமைந்தது மிகுதியும் நோக்கத்தக்கது. ஒரோவழிச் சொல்லடுக்கு முதலியன காணப்படுமேயன்றி, யாண்டும் பொருளழகின் பொருட்டே சொற்கள் அமைந்திருப்பதைக் காணலாம். பிற்காலத்துத் தோன்றிய யமகம், திரிபு முதலிய பாடல்களில் சொல் லழகின் பொருட்டுப் பொருளமைதி இழக்கப்படு