பக்கம்:இன்றும் இனியும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 ல் அ.ச. ஞானசம்பந்தன் கின்றதைக் காண்கிறோம். எனவே, இவையெல்லாம் இல்லாத செவ்விய ஆசிரியப்பா முறையில் திகழ் கின்றன புறப்பாடல்கள். மேலும், உணர்ச்சிப் பெருக்கும், கற்பனைப் பெருக்கும், விவகாரப் GL1GB&@jlb (narrative) ஆசிரியப்பாவிலேயே இயன்றனவாம். ஏற்ற இடத்தில் ஏற்ற சொல்லை உபயோகிப்பதால் உண்டாகின்ற நிறைவுத்தன்மை (Precision in poetry) usri—cijóof Gio L565ujub வேண்டப்படுகிறது. இதை நன்கு நோக்குமிடத்து, இசையையும் தாளத்தையும் தனதுறுப்பாய்க்கொண்டு நடைபெறும் இசைப் பாடல்களில் இது மிகுதியும் இயலாத காரியம் என்பது நன்கு விளங்கும். உதாரணமாக, கெடுகசிந்தை கடிதிவள் துணிவே (279) என்ற பாடலை நோக்குவோமாக. தன் தமையனையும் கணவனையும் அணித்தே இழந்தாளொரு தாய், மற்றோர் நாளும் செருப்பறை கேட்கின்றாள். தன் மகனை அழைத்துப் போருக்கு அனுப்புகிறாள். அவ்வடிகள் வருமாறு: "இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமக னல்லது) இல்லோள் - செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே " யாண்டும் எளிய சொற்களே காணப்படுகின்றன. எனினும் என்ன? ஒரு சொல்லை எடுத்துவிட்டுப் பிறி தொரு புதுச் சொற் புணர்த்துப் பார்ப்பின் உண்மை விளங்கும். புலவன் மனோதத்துவம் நன் குணர்ந்தவன். முன்னொரு நாள் தன் உயிரினுமினிய கணவனையும் இழந்த தாய்க்கல்லவா, மறுநாள் செருப்பறை கேட்பதன் மனோநிலை தெரியும். அதனை