பக்கம்:இன்றும் இனியும்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியப் பண்பு 181 நன்குணர்ந்த புலவன் இன்றும் என்ற சொல்லில் வைத்த உம்மையால் தாயின் மனோநிலையைமட்டு மன்று அப் பாடலைப் பயில்வோர் மனோநிலையை யும் ஒருவாறு விளக்கிவிட்டான். இனி, அந் நிலைக்குப் பிறகு தாய் என்ன நினைத்தாள்? வீர மறக்குடி மகளாகலின் போரிடத்து விருப்பங் கொண்டாள். எனினும் தனது கைம்மையையும் ஒரே மைந்தன் குலவிளக்காக உள்ளானென்பதனையும் நினைத்தாள். உடனே தன்னையுமறியாது ஒரு மயக்கம், மருட்சி கொண்டாள். என்றாலும் என்ன! கடமையின் முன்பு எது தான் நின்று போராட முடியும்? ஆதலால், மைந்தனை அழைத்து இன்னது சொல்வதென்று அறியாது வேலைக் கையிற் கொடுத்தாள். மைந்தன் குறிப்பறிந்து செல்லப் புறப்பட்டான். அப்பொழுது தான் தனது கனவுலகிலிருந்து மீண்ட தாய், அவனது ஆடை புழுதி படிந்திருப்பதைக் கண்டாள். உடனே வெளிது விரித்து உடுத்தினாள். உடனே தாயினது மனப்பான்மை ஒரு முத்தமிடுமாறு செய்திருக்கும். அதனை ஆசிரியர் கூறாமற் கூறுகிறார். முத்தமிட்ட நிலையில் அவனது குஞ்சி திருத்தப்படாத நிலையி லிருப்பதைக் கண்டாள்போலும். உடனே 'பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவினாள். பிறகும் தாழ்ப்பின் தன் மனத்தையே தான் நம்பாதவள் போலத் தன் கலக்கத் தையும் வெளிக்காட்டாது, 'செருமுகம் நோக்கிச் செல்க எனக் கூறினாள். இவளது துணிவை மனக் கண்ணால் காணுகின்ற ஆசிரியனுக்கும்கூட இச்செயல்துணுக்கத்தை உண்டாக்குகிறது. தான் நேரே காணுவதுபோல் நினைந்து ஒரு மகனல்லதில்லோள் என்ற நான்கு சொற்களாலும் தன் மனத்திற்றோன்றிய அவலச் சுவையைக் கொட்டிவிட்டான். இக்