பக்கம்:இன்றும் இனியும்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 ல் அ.ச. ஞானசம்பந்தன கருத்தையும் இச் சொல்லோவியத்தையும் மனத்துட் கொண்டு பாடலை மறுபடியும் படிப்போமானால் உண்மை விளங்கும். ஓர் எழுத்தையேனும் சொல்லை யேனும் மாற்றவோ, எடுத்து வேறு போடவோ இயலாதென்பது தெற்றென விளங்கும். மேலும், கூறப்பட்ட செயல்கள் எல்லாம் மிக மிக விரைவில் நடைபெறுகின்றன. அதனை ஆசிரியன் இத்தகைய ஒசைநலமுடைய பாட்டானன்றிக் கலி முதலிய ஒசையால் பாட இயலாது. பாடினாலும் இப்பயனை அது விளைக்காது என்பது திண்ணம். இதனைத்தான் அதன்கண் நிறைவுத் தன்மை என வியக்கின்றோம். இதனை ஆசிரியர் தொல்காப்பியனார் நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும், மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்' என்ற செய்யுளியற் சூத்திரப் பகுதியால் விளக்கினார். முதுமொழி என்ற பகுதிக்கே மேற்குறித்த இலக்கணஞ் சாலும் எனக் கொள்ள வேண்டுவதின்று. உலகிடைத் தோன்றிய எல்லாப் பொருள்களை யும் நடைபெறும் எல்லாச் செயல்களையும் யாவரும் காண்கிறோம். ஆனால், காணுவோனது மனோ நிலைக்கு ஏற்ப அப் பொருள், செயல்களினது உண்மைக் கருத்துத் தோன்றும். பெரியோர்களது. பாடல்களும் அத்தன்மையனவே. பயில்வோரது மனப்பண்பு, பரந்த நோக்கம் முதலியவற்றிற்கேற்ப அப் பாடல்களின் பொருளும் நயமும் விளங்குகின்றன. ஆகவே, சிறந்த கவிஞன் ஒரு செயலைக் காணுவா னாயின், ஏனையோர் காணும் காட்சிக்கும் அவன் காணும் காட்சிக்கும் வேற்றுமை உண்டு. பொருளின் உட்கருத்தைக் காணக்கூடிய வன்மை அவனிடம் உண்டு. காண்பதோடில்லை; தான் கண்ட பேருண்மை