பக்கம்:இன்றும் இனியும்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியப் பண்பு 4 183 களைப் பிறர் காணுமாறு காட்டும் அரிய ஆற்றலும் அவன் பாலுண்டு. உலகியலையும் மக்கள் வாழ்க்கையையும் நீண்டகாலம் ஒரு புலவன் காண்கின்றான். அதன்கண் உள்ள நிறைவுகுறைவு களையும் நன்கு ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருகின்றான். தான் வந்த முடிபு இயற்கை வாழ்வோடு ஒத்ததாயிருத்தல் வேண்டுமென்பதே அவனது குறிக்கோள். ஏனைய மக்கள் எல்லாரும் அவனைப் போலவே வாழினும் வாழ்க்கையின் உட்கோளை உணரும் பெற்றி .அவர்மாட்டு இல்லை. ஆனால், புலவனிடம் அவ்வன்மை நிரம்பியிருக்கின்றது. ஆதலால், தான் காணும் பேருண்மைகளைப் பிறருக்கு எடுத்துக்காட்ட முற்படுகின்றான். இன்று உலகம் போர் மயக்கத்தில் மூழ்கி உய்வழியின்றிச் சுழல்கிறது. மனித மனத்தின் இயல்பு மாறுகின்றவரை உலகிடைப் போர் நிற்கப்போவதில்லை எனப் பலருங் கூறக் கேட்கின்றோம். ஆனால், அம் மனமாற்றத்திற்குரிய வழியைக் கூறும் வீரர் ஒருவரை இதுகாறும் உலகம் காணவில்லை. இத்தகைய போர்களின் அடிப்படையான காரணம் என்ன? எக் காரணம் அறுபடின் அதன் காரியமாகிய இப் போர்கள் ஒழியும் என்ற வினாக்கள் யார்மாட்டும் நிகழாமல் இருப்ப தில்லை. சிலர் அஃது இன்றியமையாத ஓர் செயல் என்றுகூட எண்ணுவர். போர்நிறுத்தம் என்பது பகற்கனவு என்ற எண்ணமும் பலர்மாட்டுத் தோன்று கிறது. இடைக்குன்றுார்கிழார்' என்ற ஒரு புல்வர் இத்தகைய எண்ணமுடையார். இஃது புறநானூற்றின், ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது) அன்று)இவ் வுலகத்து) இயற்கை (76)