பக்கம்:இன்றும் இனியும்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 ல் அ.ச. ஞானசம்பந்தன் என்ற அவரது பாடலால் தெரிகிறது. எனினும், இன்னுஞ் சிலர் அதனினும்மேம்பட்ட அறிவு முதிர்ச்சி யால் இவ்வுண்மைகளை ஆராய முற்பட்டனர். போர் முதலிய புற நிகழ்ச்சிகட்குக் காரணமாயிருப்பன மனத் துட்டோன்றுகிற வெறுப்பு முதலியவே யாமன்றோ! 'யான் பெரியன் முதலிய ஆணவ விளைவால் போர் நிகழலாம். அன்றேல், தனக்குப் பிறர் தீங்கு செய்ததாக நினைப்பின், அதனை மறுப்பான் வேண்டிப் போர் நிகழலாம். இனிக் கீர்த்தி முதலியன பெறற்குக் காரணம் போரே எனக் கருதியும் போர் நிகழலாம். எனவே, மேற்கூறிய மூன்று காரணங்களில் பெரும் பாலும் பகைமையின் வித்துகளும் அதன் விளைவாகிய போரின் வித்துகளும் அடங்கக் காணலாம். இவ்வாறு உண்மை இருப்பதைத் தன் கூரிய அறிவால் கணியன் பூங்குன்றன் என்ற புலவர் பெருமான் காண்கின்றார். இங்ங்னம் உண்மை காணுவதே பிறர் அறிய இயலாத ஒரு சிறப்பாகும். ஆனால், புலவன் இவ்வுண்மைகளைக் கண்டதோடு நிற்கவில்லை. இவற்றை நீக்குதற்கும் வழி கண்டான். மூன்று அரிய உண்மைகளை எடுத்துக்காட்டி மேலே கூறிய மூன்று காரணங்களையும் அடித்துவிடுகின்றான். முதலாவதாக உள்ள காரணம் யான் பெரியன்' 'ஏனையோர் ஆளப்படவேண்டியவர்', 'என்மாட்டு அடங்கி நடத்தற்கு உரியர் என்ற தவறான எண்ண மாகும். இதற்கு விடையாகப் புலவன் 'யாதும் ஊரே யாவருங் கேளிர் என்று கூறினான். யாதும் நம்முடைய ஊர் என்ற எண்ணம் நன்கு மனத்தில் பதியுமானால், இடஞ் சிறிதென்னும் ஊக்கந் துரப்பப் பிறநாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்னும் எண்ணம் அற்றுவிடும். மேலும், யாவரும் கேளிர் என நினைக்கும் ஒப்பற்ற