பக்கம்:இன்றும் இனியும்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியப் பண்பு 9 185 மனோநிலை கைவரப்பெறின், கேளிருள் போர் தொடுத்தல் கேவலமானது என்ற எண்ணமும் தோன்றிப் போர் இல்லாது செய்துவிடும். இனி, ஒருவேளை கேளிருள்ளும் போர் நிகழக் காண்டுமால். அஃதங்கனமாகப் புலவன் இவ்வாறு கூறியது பொருந்துமோவென ஐயுறுவார்க்குப் பின்னடியால் விடையிறுக்கின்றான். அக் கேளிருள் போர் நிகழக் காரணம் என்னையோவென நோக்கின், தனக்குத் தீங்கிழைத்தான் என அது முடியும், பிறன் தீங்கு செய்தான் என நினைத்தமாத்திரத்தானன்றிக் கேளிருள் இப் போர் நிகழ ஏதுவில்லை. ஆதலால், அங்ங்ணம் தீங்கீழைத்தான் எனக் கருதும் ஒருவனை நோக்கிக் கவிஞர் பெருமான், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோரன்ன என அமைதி கூறுகின்றார். ஆதலால், உலகில் ஒருவர்க் கொருவர் தீங்கிழைத்தலென்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்து, வரும் துன்பங்கள் தம் வினைப் பயனாலேயே வருகின்றன என்பதையு முணர்ந்து விடின், மேலே கூறிய காரணத்தால் போர் நிகழ்தலும் பகைமை மூளுதலும் இல்லையாம். இனி, உடற்கு நேரே ஒருவன் ஊறு செய்வானாயின் அதை விதியின் காரணமாக விளைந்தது என்றால் எங்கனம் பொருந்து மென வினவுவாரை நோக்கி, ஊறு விளைப்பினும் அது துன்பஞ் செய்வதாக நினைப்பதும் நினையாது விடுவதும் மனமாகலானும், அம் மனத்தாலதுவும் வினைப்பயன் என உணர்தல் கூடுமாயின் ஆண்டுப் பகைமை மூளுதலும் இல்லையாம், இனி, உடற்கு நேரே ஒருவன் ஊறு செய்வானாயின் அதை விதியின் காரணமாக விளைந்தது என்றால் எங்ங்னம் பொருந்து மென வினவுவாரை நோக்கி, ஊறு விளைப்பினும் அது