பக்கம்:இன்றும் இனியும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை நயம் 7 அங்(கு) இவன் மலையில் தேவர் தம்மைக்கண்டு) அணைத்துக் கொண்டு வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும்(பு) என்ன நீங்கான் (பெரிய புராணம்) என்று பேசுகின்றான். அதாவது "மலையின்மேல் உள்ள குடுமித் தேவரை அணைத்துப் பிடித்துக்கொண்டு மரப் பொந்தை பற்றிக்கொண்டு விடாத உடும்பைப்போல் விடமாட்டேன் என்று தங்கிவிட்டான்' என்று கூறுகிறான். திண்ணனார் இறைவனைப் பற்றிக் கொண்டு விடமாட்டேன் என்று இருந்த ஒப்பற்ற செயலை இந்த உவமையினால்தானா விளக்க வேண்டும் என்று நாமே வியப்படைகிறோம்! பக்திச் சுவை நளிை சொட்டச் சொட்டப் பாடுகின்ற சேக்கிழார் இந்த உவமையை எவ்வாறு கையாண்டார் என்றும் வியக்கிறோம். ஒரு சிறிது சிந்தித்துப் பார்த்தால் உண்மை புலப்படும். இவ்வேடுவர் இருவரும் கல்வி வாசனையோ பிற பண்போ சிறிதும் இல்லாதவர்கள். எனவே, நாணன் கூற்றாக வருகின்ற உவமை இதைவிட உயர்ந்ததாக இருந்திருப்பின் அது சேக்கிழாருடைய கவித்திறனுக்கு ஏற்றதாகாது. உண்மையைக் கூற வேண்டுமானால் இம்மாதிரி இடங்களில் பாத்தி ரத்தின் பண்பை விளக்குகின்ற உவமையாக அமைய வேண்டுமே தவிர உயர்ந்ததாக மட்டும் அந்த உவமை இருத்தல் தகாது. இந்த உவமையைக் கூறுவதாலேயே சேக்கிழாருடைய கவிதைச் சிறப்பு நன்கு வெளிப் படுகிறது. கல்வி அறிவு இல்லாத வேடன் ஒருவன், தான் அன்றாடம் காண்கின்ற உடும்பை உவமப் பொருளாகக் கூறுவதுதான் பொருத்தமே தவிர வேறு