பக்கம்:இன்றும் இனியும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 ல் அ.ச. ஞானசம்பந்தன் துன்பஞ் செய்வதாக நினைப்பதும் நினையாது விடுவதும் மனமாகலானும், அம் மனத்தாலதுவும் வினைப்பயன் என உணர்தல் கூடுமாயின் ஆண்டுப் பகைமை விளைதல் இல்லை எனக் கூறுவாராகி, 'நோதலுந் தணிதலும் அவற்றோரன்ன எனக் கூறினார். மேலும், பிறர் விளைத்தாகக் கருதப்படும் துன்பம் சாக்காட்டையே பயப்பினும் அதுவும் தனது வினைப்பயனால் விளைந்ததென்று கொளல் வேண்டுமே தவிர வேறு நினைதல் ஆகாதென்றும், அச் சாவும் அஞ்சத்தக்கதன்றென்றுங் கூறுவார், 'சாதலும் புதுவதன்று என்று கூறுவதோடு அப் பேராசிரியர் அமைந்தாரல்லர். வாழ்க்கையின்மாட்டுத் தோன்றிய அன்பாலேயே சாவில் அச்சம் உண்டாதல் இயற்கை, இப் பேருண்மையைப் பிறர் காணவியலாதிருக்கக் கவிஞர்பிரான் காணுகின்றார். ஆதலின், அதனைப் பரிகரிக்கவேண்டி வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே எனவும் கூறினார். இனி, இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்தவழியும் வாழ்க்கையில் வெறுப்பு, கோபம் என்ற உணர்ச்சிகட்கு இடங்கொடுப்பின் பின்னர் மேலே கூறியவற்றைப் பாதுகாத்தல் இயலாது என்பது ஒருதலை. எத்துணை நீதிகளைக் கற்றிருப்பினும் இவை இரண்டு உண்ர்ச்சிகளையும் வளரவிடின், பிறகு பகைமையின் காரணங்களை ஆய்ந்து உண்மையில் பகைமை என்பது இருத்தற் கில்லை என உணரும் அறிவு தன் வேலையைச் செய்ய இயலாதாகலின், அவ்வுணர்வுகளையே அடியோடு கல்லவேண்டுமென்பார் முனிவின் இன்னாதென்றலு மிலமே என்றுங் கூறினார். இனி, மூன்றாவதாகக் காணப்படுவது கீர்த்தி கருதிப் போர் விளைத்தலாம். கீர்த்தி என்பது