பக்கம்:இன்றும் இனியும்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியப் பண்பு 9 187 ஏனையோரால் தரப்படும் புகழே. ஆதலால், பிறர் ஒருவரைப் பற்றிய புகழந்து பேசுமளவும் தனிப்பட்ட மனிதன் அப் புகழை அடையவே முயலுவான். ஆதலால், மக்களை நோக்கி ஆசிரியர் யாரையும் அவ்வாறு புகழவும் வியத்தலும் வேண்டா எனக் கூறுகின்றார். அவ்வாறு காரணம் இன்றிக் கூறின் அதனை உலகம் ஏற்றுக் கொள்ளாதாகலின், ஏற்ற காரணங்களைத் தருகின்றார். உலகியலை நன்கு உணர்ந்த பூங்குன்றனார் ஏனையோர் கண்டுங்காணாத ஒருண்மையைக் காணுகின்றார். உண்மையாகவே செயற்கருஞ் செய்கை செய்து உலகிற்குப் பெரும் பயன் விளைக்கின்றார், யாதொரு புகழையும் அடையாது போகவும், போலியான செயல்களைச் செய்து மக்களினத்தை ஏமாற்றுகின்றவர் பெரும்புகழ் அடைதலை வியப்போடு காண்கின்றார். அவ்வாறு இருப்பதன் காரணத்தை ஆராய்ந்து ஆசிரியர் ஒரு முடிவிற்கு வருகின்றார். அஃதாவது, உலகிடைப் புகழ்பெறுதலும் அதற்கு மறுதலையான இகழைப் பெறுதலும் அவரவர் வினைப்பயனேயாம் என்பதாம். ஆற்றிடைப்பட்ட புணை தன்வழிச் செல்லுமாற்றலின்றி ஆற்று நீர் செல்லும் வழியில் ஏகுதல்போல, உயிர்கள் தங்கள் விருப்பம்போல் புகழையும் இகழையும் அடைதல் இயலாதென்றும் வினைப்பயன் உள்ள வழியே அது இயலுமென்றும் கூறுவாராயினார். இம்மட்டோ? அருஞ் செயல்கள் செய்து தீருதலும் அவரவர் விருப்பம்போல் இயலுவதன்று என்றும் அதுவும் வினைவழி இயலுவதாகலின் அங்ங்ணம் செயற்கருஞ் செயல் செய்தாரை வியத்தல் ஒருவகையில் தவறுடையதே என்ற முடிபிற்கும் வருவாராயினார். ஆதலால்தான், .