பக்கம்:இன்றும் இனியும்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 ° அ.ச. ஞானசம்பந்தன் "........................... பேரி யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉ மென்பது திறவோர் . காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே! . என்று ஆணித்தரமாக எடுத்தோதினார். இவ்வுண் மையை நன்கு மனத்திற் பதிப்பார்களாயின் உலகத்தார் வீணாக ஒருவரைப் புகழ்தலினின்றும் தவிர்வார்கள்ாதலால், அதன் பயனாகப் புகழ் கருதிப் போரிடும் நொய்மையாளர்கள் போரிடுவதினின்றும் நீங்குவரென்றும் அறிகிறோம். - எனவே, இதுகாறுங் கூறியவற்றான் சிறந்த புலவன் ஏனையோர் காணுகின்றதைவிட அப்பாற் காணக்கூடியவனென்பதும், அவ்வாறு தான் கண்ட பேருண்மைகளைப் பிறர் காணுமாறு காட்டும் வன்மையுடையவனென்பதும் பெற்றாம். உலகில் வழங்கும் எம் மொழியாயினும் சரியே, அச் சிறந்த மொழியின் இலக்கிய உலகில் இவ்வளவு அரிய சிறப்புப் பொருந்திய பாடல் ஒன்றைக் காணுவது அருமையினும் அருமையே. அத்தகைய சிறப்புத் தமிழ் மொழிக்கே உண்டு. அதினும் அதன் கண் வழங்கும் தலையாய இலக்கியங்களிற் சிறந்த புற நானூற்றுத் தொகுதியில் இப் பாடலிருப்பது முற்றிலும் சால்புடைத்தே. மக்களினத்தின் அறியாமையைப் போக்கி அறிவு கொளுத்தல் முதலான தொழில்களைச் செய்ய வேண்டுவதும் பாடல்களின் வேலையே. மேலை நாட்டார் படிக்கும்போது உண்டாம் இன்பத்தையே