பக்கம்:இன்றும் இனியும்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியப் பண்பு 6 189 குறிக்கோளாகக் கொண்டிருக்கும் பாடல்களை ஒரு பகுதியாகவும், ஒழுக்கம் கற்பிக்கும் பாடல்களை மற்றொரு பகுதியாகவும் கொண்டனர். பின்னையதை 'Didatic Poetry என்று கூறுவர். அத்தகைய வேறுபாடு தமிழ்ப் பாடல்களில் காணுவது இயலாத தொன்றாம். ஈண்டுக் காணப்படும் எல்லாப் பாடல்களும் இன்பமூட்டல், கற்பித்தல் என்ற இரு தொழில்களையும் செய்வனவாகும். இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வணிகன் ஆயலன் பிறரும் சான்றோர் சென்ற நெறியென f ஆங்குப் பட்டன்று) அவன்கை வண்மையே (134) என்ற பாடலின் பாடல் நயமெலாம் ஒருபுறமிருக்க, மக்களிற் பெரும்பாலோர் செய்யுந் தவற்றைப் புலவர் எவ்வளவு அழகாகக் கண்டிக்கின்றார் என்பது நோக்கற்பாலது. வண்மைத் தன்மையுடையார் மறுமைப் பயனாய கைம்மாற்றைக்கூட எதிர் பார்ப்பின் அது வண்மையாகாதென்ற பேருண்டிையை எடுத்து விளக்கும் அழகு நோக்கற் பாலது. இனி, அரசனொருவனை நோக்கி, நால்வகைப் படையும் உடையராய மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே எம்மால் வியக்கப் படுஉ மோரே சிறுர் மன்ன ராயினு மெம்வயிற் பாடறித் தொழுகும் பண்பி னோரே! எனக் கூறுகின்றார். உண்மைக் கவிஞன் ಡಿಕJಖd வயிற்றுப் பிழைப்புக்குப் பாடுகின்றவனலன் என்பது இதனாற் றெளியப்படுகின்றதன்றோ! இனி,