பக்கம்:இன்றும் இனியும்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 ல் அ.ச. ஞானசம்பந்தன் 'செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பே மெனினே தப்புந பலவே' என்றும் ஈயென, இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயே னென்றல் அதனினுமிழிந் தன்று, கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்றதனெதிர் கொள்ளே னென்றல் அதனினு முயர்ந்தன்று' என்றும் வரும் பாடல்கள் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல; உலக முழுதுக்கும், எக்காலத்துக்கும், எவ்வகை நாகரிக முடைய மக்கட்டொகுதிக்கும் பயன்படும் நீதிகளாம். இலக்கியத்தில் பெரிதும் விரும்பப்படுவது சுவை கள். அச் சுவைகள்தாமும் எண்வகைப்படும். அவை யாவும் இப் பாடல் தொகுதியுள் யாண்டும் பரக்கக் காணலாம். விரிவஞ்சி ஒன்றிரண்டு காட்டிச் செல் கின்றாம். நகையாகிய சுவை பயக்கும் பல பாடல் களுள் நள்ளி வாழியோ. மாலை மருதம் பண்ணிக் காலைக்கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணிவரவெமர் மறந்தனர் (149) என்ற மடமை காரணமாக நகை பிறந்த பாடலும் ஒன்று. அவலச் சுவையில் 'பூத்தலை. பாரி மகளிர் (200) என வரும் பாடலும், அளிய தாமே சிறுவெள்ளாம்பல். அல்லிப் படுஉம் புல்லாயினவே” (248) என்ற பாடலும், இன்னும் (63) போன்ற பாடலும் காணத்தக்கன. இளிவரல் என்ற சுவைக்கு தொடித் தலை விழுத்தண்டுன்றி (243) என்ற பாடலும், மருட்கை என்ற சுவைக்கு நினைக்குங்காலை மருட்கை யுடைத்தே (217) என்ற ஒப்பற்ற பாடலும் உதாரணங் களாம். அச்சமாகிய சுவை களரி பரந்து. பகலுங் கூவுங் கூகையொடு, பிறழ்பல் ஈம விளக்கிற் பேய்மகளி ரொடு, அஞ்சுவந்தன்றிம் மஞ்சுபடு முதுகாடு (356) என்பது போன்ற பாடல்களாலும், பெருமிதம் என்ற உயர்ந்த சுவை இரவலர் புரவலை நீயுமல்லை (162) என்பது போன்ற பாடல்களாலும் விளக்கப்