பக்கம்:இன்றும் இனியும்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியப் பண்பு $ 191 படுகின்றன. இனி, வெகுளி என்ற சுவை வரிவயம் பொருத வயக்களிறு போல, இன்னும் மாறாது சினனே' (100 என்பது போன்ற பாடல்களிடத்தும் பரக்கக் காணலாம். உவகை என்ற சுவை 'ஆதல் நின்னகத்தடக்கிச் சாதல் நீங்க எமக் கீத்தனையே. நீலமணி மிடற்றொரு வன்போல, மன்னுக பெரும நீ.ே (9) என்பது போன்ற பாடல்களிடத்துக் கிடைக் கின்றது. இத்தனை சுவைக்கும் நிலைக்களனாயுள்ள இப் பாடற்றொகுதியில் இலக்கிய அழகுகள் இன்னும் எத்தனையோ உள. ஓர் இலக்கியம் அக்கால மக்களின் வாழ்க்கையை, வாழ்க்கையின் குறிக்கோளை, மக்கட் பண்பை எடுத்து விளக்கும் கண்ணாடியாயிருக்க வேண்டுமென்பது இலக்கிய ஆராய்ச்சியாளர் முடிபாம். அம் முறையில் கிறிஸ்துநாதர் தோன்று தற்குப் பன்னூறாண்டுகட்கு முன்னர் வடவேங்கடம் தென்குமரியாயிடை வாழ்ந்த மக்களின் மனோ நிலையை, இத் தமிழ் நாட்டில் பல்வேறிடங்களிற் றோன்றிய இப் புலவர் பெருமக்கள் நன்கு எடுத்துக் காட்டியுள்ளனர். அப் பலதிறப்பட்ட பாடல்களுள் இரண்டை ஈண்டு எடுத்து ஆராய்வோம். இவற்றுள் முதலாவது ஒருசாரர் சிறுபாலான மக்கள் தொகுதி யின் மனோ நிலை. அது உயர்ந்த நிலை என்பதைக் காட்ட வரவில்லை. அதன் மறுதலையான தாழ்ந்த மன நிலை யுள்ளாரின் படமது. இன்னார் பிறர் துன்பங் கண்டு அதனால் மகிழ்வும், அத் துன்பத்திற்கு ஒரு சிறிது தாங் காரணராயின் அதனால் பெருமிதமுங் கொள்வர். இதனைப் புலவன் ஏற்றுக்கொள்கிறான் எனக் கூறுதற்கில்லை. எனினும், தன்முன் காணும் மக்களுள் ஒரு கூட்டத்தாரின் பண்பைப் படம்