பக்கம்:இன்றும் இனியும்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 அ.ச. ஞானசம்பந்தன் பிடித்துக் காட்டவேண்டிச் செய்த செய்யுள் இது எனக் கூறலாம். கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனை.அவர் நனந்தலை நல்லெயில் புள்ளின. மிமிழும் புகழ்சால் விளைவயல் வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத் தேர் வழங்கினை (15) என்ற ဒွိႏိုင္ဆို பாடலால் மக்கட் பண்பின் இழிந்தோர் செய்கை வெளியர்கின்றது. இவ்வகை மக்கள் அன்றும் இன்றும் என்றும் உள்ளனர். இத்தகையோர் இருப்ப தனாலேயே சான்றோர் பெருமை தெற்றென விளங்கு கிறது. எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின் எனக் கூறும் சீரிய மரபும் நன்கு விளங்குகிறது. இனி, பெரிதும் மேம்பட்ட மக்கட் கூட்டத்தா ரின் மனப் பண்பை வெளியிடும் பாட்டு ஒன்றை நோக்குவோம். மனப்பண்பு சிறக்கச் சிறக்க உயிர்த் தொகுதியின் விரிவும் அவ் விரிவில் காணப்படும் ஒற்றுமையும் நன்கு விளங்கும். கேவலம் விலங்கினங் களும், தம்மை ஒத்த உயிரும் இயல்பும் உடையன என நினைக்கும் ஒப்பற்ற மனோநிலையை இப் பாடலால் அறிகின்றோம். அதுவும் எழுத்து வாசனை அறியாத ஒரு வேட்டுவப் பெண் மனத்துட்டோன்றும் கற்பனைக் காவியத்தை ஈண்டுக் காண்கின்றோம். இப் பாடலின் கருத்து மிகவும் எளிமையானதே. ஒரு வேட்டுவப் பெண் குடிசை வாயிலில் தினை உலர்த்தி யுள்ளாள். அதனண்மையில் ஒரு கலைமான் பெடை யோடு விளையாடுகிறது. அவளது கணவனும் அதனருகே பேட்டையாடிகளைப்பால் மெய்ம்மறந்து