பக்கம்:இன்றும் இனியும்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்க்கியப் பண்பு 9 193 உறங்குகின்றான். இந் நிலையில் தினையைக் கோழி தின்கின்றது. இத் தினையைத் தவிர இரவுக்கு வேறு ஆகாரம் இல்லை. இச் சமயத்தில் கோழியை ஒட்ட வேண்டும். ஆனால், அவள் அதனைச் செய்யவில்லை. அதன் காரணத்தை ஆசிரியர் மொழியாலேயே காணு வோமாக. "கைம்மான் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப் பார்வை மடிப்பிணை தழீஇப் பிறிதோர் தீர்தொழிற் றணிக்கலை திளைத்துவிளை யாட இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் கணவ னெழுதலு மஞ்சிக் கலையே பிணைவயிற் றிர்தலு மஞ்சி யாவதும் இல்வழங் காமையிற் கல்லென வொலித்து மானதட் பெய்த வணங்குதினை வல்சி கானக் கோழியோ டிதல்கவர்ந் துண்டென (320) எனவே, பெண்மானும் ஆண்மானும் இன்பந் துய்த்த પી தவிடும் என அஞ்சிய அவள் தினையைத் இன்னும் கனக கோழியை வெருட்டாது விட்டு விட்டாள் என்று ஆசிரியர் கூறுகிறார். சற்று நின்று உயரிய மனப்பான்மை این بیمناسایی نر T : எந் நிலை யடை த்தி இந்த தென்பதும் தெற்றென விளங்கும். இதனைவிட உயர்ந்த மனப்பண்பைக் குறிக்கோளாகவேனும் கொண்டிருந்தனர் எனப் பிறநாட்டு இலக்கியங்களில் நாம் காணுமாறிலது. எனவே, இதுகாறுங் கூறியவற்றான் இலக்கியத் துக்குரிய பண்பும் பாடலுக்குரிய பண்பும் பரந்து மிளிரும் தன்மையுடையது புறநானூறு என்பது விளங்கும். பொய்யாய நாகரிகத்தே புக்கழுந்தி இ.இ.-13