பக்கம்:இன்றும் இனியும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அ.ச. ஞானசம்பந்தன் எத்தகைய உயர்ந்த உவமையையும் கையாளுதல் ஆகாது. இதற்கு மாறாகக் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன் மிக உயர்ந்த பாத்திரமான இலக்குவன் கூற்றில் இத்தகைய தாழ்ந்த ஓர் உவமையைக் கையாளு கின்றான். இந்த இடத்தில் பேசுகிறவன் கல்வி கேள்வி களில் மிக்கவனாம் இராமபிரானின் தம்பியாகிய இலக்குவன் ஆவான். என்றாலும், தமையனுக்குக் கிடைக்கவேண்டிய முடியைச் சிற்றன்னை ஏமாற்றிப் பறித்துவிட்டாள் என்ற எல்லையற்ற கோபம் காரணமாக, "மூட்டாத காலக் கடைத்தி” என மூண்டு எழுந்து நின்று பேசுகின்றான். அவனுடைய கோபம், மேல் உலகத்தையும் சுட்டெரிக்கக்கூடியதாய் மூண்டு நின்ற நிலையை, இராகவனே கண்டு மனம் வருந்தி, இலக்குவன் கொண்ட கோபம் தவறானது என்று பேசுகின்றான். முறை தவறித் தோன்றுகின்ற இத்தகைய சீற்றம், இலக்குவன் போன்ற பண்புடைய ஒருவனுக்குத் தோன்றக்கூடாது என்ற உண்மையை, இராகவன், "உளையா அறம் வற்றிட, ஊழ் வழுவுற்ற சீற்றம், விளையாத நிலத்து, உனக்கு எங்ங்ண் விளைந்தது?" என்று கேட்கும் வினாவிலேயே அடுக்குகிறான். இத்துணை அளவு கோபத்தில் கொதித்து எழுந்த இலக்குவன், பேசுகின்ற பேச்சுகள் மிகத் தாழ்ந்த மனநிலையில் உள்ள ஒருவன் பேசுகின்ற பேச்சுக்களாகவே அமைந்து விட்டன என்பதையும், கமலக்கண்ணன், "வாய் தந்தன. பேசுதியோ, மறை தந்த நாவால்" - அதாவது, வேதத்தை ஓயாது பாராயண்ம் செய்கின்ற திருவாயால் வழங்கத் தகர்த வார்த்தைகளை நீ பேசலாமா என்ற கருத்துப்படக் கேட்கின்றான். இராமனின் இக் கூற்றுகளால்