பக்கம்:இன்றும் இனியும்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 அ.க. ஞானசம்பந்தன் இருக்கின்ற ஒரு சூழ்நிலை இல்லை. எனவே, ஒருவனுடைய கருத்து என்ற அளவிலே மதிப்புக் கொடுப்பீர்களேயானால் அது போதுமானது. அப்படி ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை ஒதுக்கிவிட வேண்டா, ஏனென்றால், கல்லூரியிலிருக்கின்ற வரையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மாணவர்களுடைய மனோநிலையை, வளர்ச்சியை அறியக்கூடிய வாய்ப்பு இருந்தது. இன்று நான் இருக்கின்ற அலுவலில் அன்றாடம் தமிழ் நாட்டினுடைய வளர்ச்சியை ஒரளவு அறிய முடிகின்றது. எல்லாவகையான வளர்ச்சியையும் அறிய முடிகின்றது. குறுக்கு வளர்ச்சி - நெடுக்கு வளர்ச்சி - தவறான முறையிலே வளருகின்ற புற்று நோய் வளர்ச்சி என்றிருக்கின்றதே - கட்டி வளர்ச்சி, அதைக்கூட. அறிந்துகொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றேன். இனி, உங்கள் கேள்விகளைத் தொடங்கலாம். - பெறக்கூடி நிலை எ விடை: 'வளர்ச்சி என்பதற்குத் தாங்கள் கொள்ளும் பொருள் என்ன? நல்ல கேள்விதான். நீங்கள் கேட்கின்ற வளர்ச்சி இருக்கிறதே அதனை இரு வகையாக நான் கொள்ளுகின்றேன். ஒன்று, பரந்து செல்கின்ற வளர்ச்சி; மற்றொன்று ஆழ்ந்து செல்கின்ற வளர்ச்சி. இந்த இரண்டு வளர்ச்சிகளும் ஒருசேர ஏற்பட்டால் அஃது உண்மையான பயனுடைய