பக்கம்:இன்றும் இனியும்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 ல் அ.ச. ஞானசம்பந்தன் சங்ககால இலக்கியமாகட்டும் அதற்குப் பின்னர்த் தோன்றிய இடைக்கால இலக்கியங்க ளாகட்டும், அங்கே நீங்கள் காணுகின்ற அறிவின் ஆழம் - அல்லது அனுபவத்தின் ஆழம் - அல்லது அனுபவத்தின் தெளிவு - இவை பிற்கால இலக்கியங் களில் உள்ளனவா என்று ஆராய்ந்து பார்ப்பீர்களே பானால், கொஞ்சம் சந்தேகம் தட்டத்தான் செய்யும். பழைய இலக்கியங்களில் எந்த ஒரு புலவனும் எந்த ஒரு பொருளைக் காண்பதாக இருப்பினும் கண்ட பொருளினிடத்துத் தன்னுடைய மனத்தைச் செலுத்தி, அதன் பின்னே அறிவையும் செலுத்தி, பிறகு அந்தப் பொருளோடு இரண்டறக் கலந்து, அனுபவித்து, அந்த அனுபவத்திலிருந்து தான் தனியே பிரிந்து புறத்தே இருந்து கெர்ண்டு, பொருளை நோக்கி, அனுபவத்தை வெளியிடுவதனைத்தான் காண்கின்றோம். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கைமுறை செல்லுகின்ற ஒரு சூழ் நிலையில், அதாவது, எல்லாவற்றிலும் அவசரம், எல்லாவற்றிலும் எண்ணிக்கை என்ற முறையிலே செல்கின்ற காரணத்தால், எதனையும் நின்று ஆழ்ந்து சிந்திக்கின்ற மனோநிலையோ சூழ்நிலையோ இல்லாமற் போய்விட்டது நமக்கு. இது இன்று நேற்றுத் தோன்றிய குறையன்று. 3 அல்லது 4 நூற்றாண்டு களாகவே தமிழர்களைப் பொறுத்தமட்டில் மட்டும் அல்லாமல் உலகத்தில் இன்னும் நம்மோடு சேர்ந்த பலருக்கும் தோன்றியுள்ள குறை இது. பரந்து விரிந்து செல்லச் செல்ல நம்மையுமறியாமல் ஆழம் குறுகிக் கொண்டே வந்துவிட்ட ஒரு சூழ்நிலையில்தான் இன்று வளர்ச்சி இருக்கின்றது என்று கருதுகின்றேன். - தமிழ்மொழியும் தமிழினமும் இக் காலத்திற் பெற்றுள்ள நிலை என்ன? அதை அன்றாடம் பார்த்துக்