பக்கம்:இன்றும் இனியும்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 199 கொண்டிருக்கின்றேன்! எத்தனை எத்தனை சூழ்நிலையில் நம்முடைய வளர்ச்சி இருக்கின்றது? வெறும் உணர்ச்சி வடிவில் இருந்த கவிதைகளைத் தவிர வேறு ஒன்றும் இல்லாதிருந்த சங்ககாலச் சூழ்நிலையிலே இருந்து, வானவெளிப் பயணத்தைப் பற்றித் தமிழில் நூல் ஆக்கித் தருகின்ற அளவிற்கு வளர்ச்சி அடைந்தோம் என்றால் தவறு ஒன்றுமில்லை. சங்ககாலப் பாடல்கள் அனைத்தையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் உணர்ச்சி உலகம் ஒன்றுக்கு அப்பால் செல்லக் காணோம். அந்த ஒரு சூழ்நிலையிலிருந்து இன்று பரந்து விரிந்து வளர்ந்து, எந்தக் கலையாக இருப்பினும் அவற்றையெல்லாம் நம்முடைய மொழியிலேயே சொல்லலாம் என்கிற அளவிற்கு நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோ மென்றால், இதனை வளர்ச்சி என்று சொல்லாமல் வேறு எதனைத்தான் வளர்ச்சி என்று சொல்லப் போகின்றோம்? நிச்சயமாக இது நம்முடைய மொழி பெற்ற வளர்ச்சிதான். அப்படிச் சொல்லும்போது நாம் பெற்ற வளர்ச்சியும் உள்ளே இருக்கின்றது என்பதை மறந்துவிட வேண்டா. நம்மையல்லாமல் மொழி தனியே இயங்குவதில்லை; நாம் வளர்ச்சியடையாமல் மொழி மட்டும் வளர்ச்சியடையப் போவதில்லை. எனவே, மொழி வளர்ந்தது என்று கூறினால் ஒரளவு னம் வளர்ந்ததாகவும், இனம் வளர்ந்தது என்று கூறினால் மொழி வளர்ந்ததாகவும், பெரும்பாலும் கொள்ள வேண்டும். ஏன் பெரும்பாலும் என்று சொல்கிறேனென்றால், சிறுபான்மை அதில் வேறுபாடு வரும். அதனைப் பின்னர்க் கேள்விகள் வருகின்ற பொழுது அதற்கு விடை கூறுகின்ற முறையில் சொல்கின்றேன். எனவே, உணர்ச்சி உலகிலிருந்து,