பக்கம்:இன்றும் இனியும்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 அ.ச. ஞானசம்பந்தன் அற்புதமான கவிதைகளை வடித்த ஒரு சூழ்நிலையி லிருந்து இன்று ஏனைய நாட்டார்கள் அறிவுத் திறமையில் கண்ட பேருண்மைகளை எல்லாம் எடுத்து நம்முடைய மொழியிலே சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ச்சி பெற்றோமென்றால், அது சிறந்த வளர்ச்சி தான் என்பதில் ஐயப்பாடு இல்லை. ஆனால், அந்த வளர்ச்சி உண்மையான வளர்ச்சியா? இல்லை, போலி வளர்ச்சியா? என்பதைக் கொஞ்சம் காண வேண்டும். விஞ்ஞானம் படித்த உங்களுக்கு உண்மை ஆழமும் Gäsrop op(pub (real depth and apparent depth) argårp இரண்டும் நினைவுக்கு வரலாம் என்று நினைக்கின் றேன். உண்மை ஆழம் ஒன்று; போலி ஆழம் ஒன்று. பல சமயங்களிலே போலியாக இருக்கின்ற இந்த வளர்ச்சி, உண்மை வளர்ச்சியைப் போல நம்முடைய மனத்திலே ஒரு கற்பனையைத் தோற்றுவித்து விடுமானால், கொஞ்சம் அஞ்சத் தகுந்ததாக முடிந்து விடும் அது. 20 நூற்றாண்டுகளாக வளர்ந்துகொண்டு வருகின்ற நம்முடைய தமிழ்மொழி, அன்று உணர்ச்சி ஒன்றை மட்டும் வெளியிடக்கூடிய தகுதி உடையதாக இருந்தது. அறிவுலகத்தில் உள்ள எதனையும் வெளி யிடக்கூடிய சூழ்நிலை தமிழ்மொழிக்கு இருந்ததாகத் தெரியவில்லை. எங்கோ ஒன்றிரண்டு பாட்டில் விஞ்ஞானம் பேசியிருக்கலாம். புறநானூற்றிலே, "மண் திணிந்த நிலனும், நிலனேந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும், வளித்தலைஇய தீயும், தீ முரணிய நீரும்" என்ற பாடலில், இன்றைக்கு மேல்நாட்டு விஞ்ஞானிகள் இதுதான் என்று முடிவு செய்ய முடியாத ஈத்தரைப்பற்றி எடுத்து மிக அழகாகப் பேசுகின்றான் புறநானூற்றுப் புலவன். "நிலன் ஏந்திய