பக்கம்:இன்றும் இனியும்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 9 201 விசும்பு" என்று சொன்னான். எல்லாக் கோளங்களும் அந்த வானவெளி மண்டலத்திலே மிதந்து கொண்டிருக்கின்றன என்று இன்றைய விஞ்ஞானி பேசுகின்ற பேச்சை, அன்று இரண்டு சொற்களில் பாட்டிலே பாடிவிட்டுப் போகின்றான் முரஞ்சியூர் முடிநாகராயன். 'மண் திணிந்த நிலன்' என்று செறிவைப் பற்றிப் (density) பேசுகின்றான். திணிவு என்ற சொல்லைத்தான் இன்று பயன்படுத்துகின்றோம். விசும்பு தைவரு வளியும் என்று கூறும்போது காற்று மண்டலம் பூமியைச் சுற்றி ஒரளவு துாரம் நிறைந்திருப்பதையும் பூமி சுற்றும்பொழுது இக் காற்று மண்டலம் பூமியைத் தடவிக் கொண்டிருத்தலையும் கூறுகின்றான் கவிஞன். இத்தனை விஞ்ஞானமும் தமிழன் பேசியதுதான்; நான் ஒன்றும் புதுமையாகச் சொல்லவில்லை. மண்திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீரும் (புறம் - 2) என்று விஞ்ஞானக் கருத்தைப் பாடியதுபோல ஒன்றிரண்டு பாடல்கள் இருக்கலாம். ஆனால், பெரும் பான்மையான பாடல்கள் அறிவுலகத்தை விட்டு உணர்வுலகில் நின்று பாடிய பாடல்கள்தாம். அப்படி இருந்த மொழி இன்று இவ்வளவையும் வாங்கிக்கொள்ளக்கூடிய அளவிற்கு வளர்ச்சி பெற்று விட்டது. இதைவிட வேறு வளர்ச்சி தேவையா என்று கேட்கலாம். என்னைப் பொறுத்தமட்டில் ஒரு சிறிய சந்தேகம். உண்மைதான்; வளர்ச்சி என்று ஒப்புக்