பக்கம்:இன்றும் இனியும்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 ல் அ.ச. ஞானசம்பந்தன் கொள்கிறேன். ஆனால், இந்த வளர்ச்சி பரந்து விரிந்திருப்பதைப் போல ஆழ்ந்து அகன்று செல்லுமே யானால் மகிழ்ச்சி அடைவேன். அந்தப் பரந்து விரிந்து இருக்கின்ற சூழ்நிலையில் மட்டும் நின்றுவிடுமானாால் ஏனைய மொழிகளுக்கு ஏற்பட்ட நிலை என் தமிழ் மொழிக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறேன். இன்று விஞ்ஞான உலகத்தை இலத்தீன் வார்த்தை களும் கிரேக்க வார்த்தைகளும் தாம் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. இல்லை என்று சொல்வதற் கில்லை. பெரும்பாலான கலைச்சொற்களும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலிருந்து எடுக்கப்பட்டவைதாம். என்றாலும் என்ன? அந்த மொழிகள் இன்று எங்கே? உலகத்தை எல்லாம் ஆட்சி செய்ததாகிய அந்த கிரேக்க நாகரிகம், எங்கே? எல்லாப் பாதைகளும் ரோம் |B5(5535 Glogyth' (All roads lead to Rome) argårp பழமொழி செய்தார்களே அந்த ரோமானியர்கள் எங்கே? அந்த நாகரிகம் எங்கே? ஏன் அவையெல்லாம் பொய்யாக் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய் விட்டன : விஞ்ஞானச் சொற்களுக்கெல்லாம் தாயகமாக இருந்த இலத்தீன், கிரேக்க மொழிகள் இன்று ஏட்டளவிலே நின்று விட்டனவே! ஆகவே, இவற்றிற்கெல்லாம் தாயகமாக இருப்பதுடன் எல்லாச் சொற்களையும் பெற்றிருக்கின்ற ஒரு காரணத்தால் மட்டும் ஒன்றை வளர்ச்சி என்று சொல்லப் போகிறீர்களா? - இன்று பல பெரியோர்கள், "ஏனையா இவ்வளவு கவலை. எல்லாம் வடமொழியிலிருக்கிறது. அள்ளிக் கொள்ளுங்கள்" என்று சொல்லுகிறார்கள். அள்ளிக் கொள்ளலாமே! ஏன் அள்ளக்கொள்ள முன்வர வில்லை? அறுவை மருத்துவத்தில் கிராஃப்டிங்