பக்கம்:இன்றும் இனியும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 9 203 (grafting) என்ற ஒன்றுண்டு. ஓர் இடத்திலுள்ள சதையை மற்றோர் இடத்தில் எடுத்து வைத்துத் தைக்கிறார்கள். ஆனால், செத்துப்போன உடம்பிலே யிருந்து எடுத்து வைக்க முடியாது சதையை இறந்த உடம்பிலிருந்து சதையை எடுத்து உயிருள்ள உடம்பில் வைத்துத் தைப்பீர்களானால் கிராஃப்டிங் (grafting) நடைபெறாது. வழக்கில் இல்லாத மொழிகளில் இருந்து கலைச் சொற்களைப் பெற்றுக்கொண்டால் இறந்த உடம்பிலிருந்து சதையை எடுத்து உயிருள்ள உடம்பில் வைத்துத் தைப்பது போலத்தான். ஆகவேதான், இந்த வளர்ச்சியைப் பற்றி ஐயமடைகிறேன். உணர்ச்சியை மட்டும் வெளியிடக்கூடிய தகுதி உடையவர்களாக இருந்த நாம், இன்று இவ்வளவு தூரம் வந்து விட்டோமே, இது வளர்ச்சி இல்லையா என்றால், ஆம் என்று கூற மனம் இடம் கொடுக்கவில்லை. பரந்தோம். விரிந்தோம் உண்மை! மணி ஒன்றுக்கு 4 மைல் வீதம் நடந்து கொண்டிருந்த நாம், இன்று ஜெட் விமானத்தில் 592 மைல் வேகத்தில் லண்டனில் காப்பி சாப்பிட்டு விட்டு, நியூயார்க்கிலே மத்தியானச் சாப்பாட்டிற்குப் போய்ச் சேர்ந்து விடுகிறோம்! வளர்ச்சிதான்! யாரும் இல்லை என்று சொல்வதற்கில்லை. இன்னும் போரில் ஈடுபடுகின்ற ஜெட் விமானங்கள், 1,800 மைல் வேகம் போகின்றன. வளர்ச்சிதான்; இல்லை என்று சொல்வதற்கில்லை. என்றாலும், இதுதான் வளர்ச்சி என்று. நீங்கள் கருதினால் அடியேன் அந்த வளர்ச்சிக்குக் கையெழுத்திடத் தயாராயில்லை. இது வளர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இத்தகைய வளர்ச்சி எங்கே கொண்டுபோய் மற்ற நாடுகளை விட்டது என்பதைப் படித்த காரணத்தால் அச்சம் தோன்றுகிறது. ஆனால், தமிழனைப் பெர்றுத்த