பக்கம்:இன்றும் இனியும்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 ல் அ.ச. ஞானசம்பந்தன் மட்டில் நல்ல வேளையாக இதை வளர்ச்சி என்று கருதவில்லை. மணிக்கு 412 மைலிலிருந்து 4,000 மைல் வேகம் போனாலும் அதை வளர்ச்சி என்று சொல்ல வில்லை அவன். போகிறவன் மனோநிலையை வைத்து வளர்ச்சியைக் கணக்கிட்டான் தமிழன். 4. மேல் வேகத்தில் போனாலும் 4,000 மைல் வேகத்தில் போனாலும், புவிஈர்ப்புச் சக்தியை வெல்வதற்காக 25,000 மைல் வேகத்தில் போனாலும் அதைப்பற்றிக் கவலை இல்லை. 25,000 மைல் வேகம் போனால் பூமியினுடைய ஈர்ப்புச் சக்தியை வென்றுவிடலாம். அப்படி வென்றுவிட்டதோடு தீர்ந்து போனதா? எங்குப் போனாலும் திரும்பி வரவேண்டுமென்று தானே ஆசைப்படுகிறோம். ஆகவே, தமிழன் இவற்றை எல்லாம் விட்டுவிட்டு மனம் என்ற ஒன்றை வைத்துத் தான் வளர்ச்சியைக் கணக்கிட்டான். அந்த மனம்! அது வளர்ந்ததா? மொழி வளர்ந்தது - சொல் வளர்ந்தது - விஞ்ஞானம் வளர்ந்தது - கலைச் சொற்கள் வளர்ந்தன - எல்லாம் வளர்ந்தன; ஆனால் நாம் மட்டும் வளரவில்லை! அதுதான் வருத்தத்திற்கு உரியது. அன்றைய சூழ்நிலையிலே இவை எல்லாம் இன்றுபோல் வளராவிட்டாலும் தமிழன் மனம் வளர்ந்திருந்தது. அன்றைத் தமிழன் ஒரே துறையில்தான் முன்னேறினான். சங்க காலத்தில் எல்லாத் துறையிலும் வளர்ந்து ஆகாயத்தை முட்டினான் என்று நான் சொல்லவே இல்லை. அவன் பிடித்தது ஒரே ஓர் உலகம். அந்த உணர்வுலகம், இரண்டு அங்குலத் தந்தத்தில் திருவனந்தபுரத்தில் அழகான வேலைப்பாடு களுடைய பொம்மை செய்கிறார்களே அதுபோல, மனிதனிடத்தே உள்ள பல்வேறு பண்புகளிலே