பக்கம்:இன்றும் இனியும்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 205 ஒன்றாகிய உணர்ச்சியை மட்டும் எடுத்துக்கொண்டு தந்தத்திலே சிற்பம் செய்வதுபோல் அதற்கு வடிவு கொடுத்தான் அன்றைத் தமிழன். அவனுடைய பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும் அதற்குச் சான்றுகள். அதை விட்டு அப்பால் போகவில்லை அவன், ஆழ்ந்து ஆழ்ந்து சென்று, முக்குளித்து முக்குளித்து, மனித உணர்ச்சியிலேயே இத்தனை வேறுபாடு தாம் உண்டு என்பதை எடுத்துக்காட்டுவதுபோலக் காட்டி விட்டான். இல்லாவிட்டால் அகத்திணையைப்பற்றி இத்தனை நூல்கள் பாடமுடியும் என்று நினைக் கிறீர்களா? எத்தன்ை ஆயிரக்கணக்கான பாட்டுகள்? ஆனால், ஒரு பாட்டைப்போல ஒரு பாட்டு இருப்பதே இல்லை. தற்காலத்திலே பத்திரிகையில் வரும் கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றைப் படிக்கும் போதெல்லாம் எங்கேயோ படித்ததுபோல் தோன்று கிறதே, ஏன்? பிறர் எழுதியவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துப் புதிய வடிவம் தந்து தம்முடையது என்கிறார்கள். ாடல்களில் இருப்பவர் போயும் போயும் விபுந்தாம்; ஆ.:பால ஒன்றும் எறாலும் இந்தத் தலைவனையும். யையும் வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடிவிட்டார்கள். 3 வரியில் ஒரு பாட்டு, 300 வரியிலும் ஒரு பாட்டு, மூன்று வரியில் பாடின புலவனே 9 வரியில் பாடினான்; 12 வரியில் பாடினான்; 22 வரியிலேயும் பாடி வைத்தான். அவனுடைய அனுபவத்தின் ஆழம் எத்தகையதோ நாம் அறியோம். திருப்பித் திருப்பி அண்தத்தான் சொல்லுகின்றான்; ஆனாலும், சலிப்புத் தட்டுவ தில்லை என்றால், அந்த அனுபவத்தை - புறத்திலே