பக்கம்:இன்றும் இனியும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை நயம் 9 இலக்குவனுடைய மனோநிலை கோபம் காரணமாக எவ்வளவு தாழ்ந்த நிலைக்குச் சென்றுவிட்டது என்பதை நமக்கு நன்கு விளக்குகின்றன. இத்தகைய சீற்றத்துடன், இத்தகைய ஒரு பண்பிழந்த மனோ நிலையில் இலக்குவன் ஒர் உவமை கூற நேர்ந்தால், அவன் கல்வி, அறிவு, பண்பாடு ஆகியவற்றிற்கு ஏற்ற உவமை கூறுவான் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அப்படியே அவன் கூற்றாக உயர்ந்த ஒர் உவமையைக் கவிஞன் கூறியிருப்பின் கம்பன் கவிஞனாக ஆகலாமே தவிர கவிச்சக்கரவர்த்தியாய் ஆக முடியாது. கவிச்சக்கரவர்த்தி கம்பனா இத் தவற்றைச் செய்வான்? எனவே, மிகமிக விழிப்புடன் இலக்குவன் கூற்றாகக் கீழ்க்கண்ட உவமையைக் கவிஞன் தருகின்றான். இராமனுக்குக் கிடைக்கவேண்டிய முடியைப் பரதனுக்குக் கைகேயியே பெற்று வைத்தது எதைப் போல இருக்கிறதென்றால், சிங்கக் குட்டிக்கு எனத் தயாரித்து வைத்த இன்சுவையோடுகூடிய புலாலை அற்பத்தனம் பொருந்திய சொறி நாய் ஒன்றுக்கு இடுவது போலாகும் என்ற கருத்தில் இலக்குவன் பேசுகின்றான். - சிங்கக் குருளைக்கு இடுதீம் சுவை ஊனை, நாயின் வெங்கண் சிறுகுட் டனை ஊட்ட விரும்பி னாளே ! (கம்பன் - 1718) என்ற இலக்குவன் கூற்று ஆய்தற்குரியது. "அறத்தின் அணி” என்று விஸ்வாமித்திரனாலும், "ஆயிரம் இராமர்கட்கும் மேம்பட்டவன்' என்று இராமன் தாயாகிய கோசலையாலும் புகழப்பெற்ற பரதனை 'தள்ளரிய பெருநீதித் தனி ஆறு பக மண்டும் வெள்ளம்' என்றும் புகழப்பெற்ற பரதனை