பக்கம்:இன்றும் இனியும்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 ல் அ.ச. ஞானசம்பந்தன் நிறுத்தி வைத்துப் பார்க்கின்றானே அந்தக் காட்சியின் ஆழத்தைத்தான் வளர்ச்சி என்று நான் கருதுகிறேன். அந்த வளர்ச்சியிலே விஞ்ஞானம் இருக்கிறதா என்று கேட்டால், இல்லாமல் இருக்கலாம்; அது பற்றி நான் கவலைப்படவில்லை. மணிக்கு 25,000 மைல் வேகத்திலே விண்வெளிக் கப்பல் மாதிரி போனார்களா? போகாமலிருக்கலாம். ஆனாலும், அன்றைத் தமிழன் அந்த வாழ்விலே ஒரு குறிக்கோளைக் கண்டான்; ஒர் அமைதியைக் கண்டான்; அதிலே இன்பம் அடைந்தான். 4% மைல் வேகத்திலே போகும்போதும் அதில் இன்பத்தைக் கண்டு அமைதியைக் கண்டு வாழ்ந்தான், இன்று 4,000 மைல் வேகத்திலே போகும்போதும் நாம் அமைதியைக் காணவில்லை; இன்பத்தைக் காணவில்லை! அதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, வளர்ச்சி என்பது நெடுநெடு என்று வளர்வதன்று. எல்லா உறுப்புகளும் சமமான முறையிலே வன்மையைப் பெற்றிருப்பதைத் தான் முழு வளர்ச்சி என்று கூற வேண்டும். வளர்ச்சி என்பது எல்லாத் துறையிலேயும் இருக்க வேண்டும். வளர்ச்சி என்பது ஆழ்ந்தும் அகன்றும் இருக்க வேண்டும். அப்படி இல்லாத வளர்ச்சி ரோம, கிரேக்க, எகிப்திய, மெசப்படோமிய, சுமேரிய நாகரிக வளர்ச்சிதான். கிரேக்கர்கள் வளர்ந்தார்கள்; இல்லை என்று நீங்கள் சொல்ல முடியுமா? சாக்ரடிசும், அரிஸ்டாட்டிலும், பிளேட் டோவும், அரிஸ்டோபொனிசும் தோன்றிய ஒரு மொழியை வளர்ச்சி இல்லாதமொழி என்றா நினைக்கிறீர்கள்? வளர்ச்சி இல்லாத நாகரிகம் என்றா நினைக்கிறார்கள்? ஏன் இன்று அவை எல்லாம் போய்விட்டன? அதனைச் சற்று ஆய வேண்டும்.